/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
பயிர் கழிவுகளை பயனுள்ளதாக்கும் நுட்பம்
/
பயிர் கழிவுகளை பயனுள்ளதாக்கும் நுட்பம்
PUBLISHED ON : ஜன 08, 2026 07:26 AM

நாம் வீசும் உணவுக் கழிவுகளின், மதிப்பை அமெரிக்க வேதியியல் சங்கத்தின் புதிய ஆய்வுகள் மீண்டும் உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளன. பாழாகும் விவசாயக் கழிவுகளை, நவீன பசுமை விவசாயத்திற்கான பொருட்களாகவும், மனித நலத்திற்கு உதவும் உயிரிப் பொருட்களாகவும் மாற்ற முடியும் என, அண்மைக்கால ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
சர்க்கரை தயாரித்த பின், மீதமாகும் பீட்ரூட் சக்கையிலிருந்து, கோதுமைப் பயிரை நோயிலிருந்து காக்கும் இயற்கை பூச்சிக்கொல்லிகளை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். மேலும், தேங்காய் நார்களை உண்ட மரவட்டைகள் வெளியேற்றும் எருவை, நாற்றங்கால்களில், நாற்றுகளுக்கான வளர்ச்சி ஊக்கியாக பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கழிவாகக் கருதப்படும் முள்ளங்கிக் கீரைகளில் இருந்து எடுக்கப்படும் ஆன்டி- ஆக்சிடன்ட் சத்துக்கள், மனிதக் குடலில் 'நல்ல கிருமி'களை வளர்க்க உதவும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், பீட்ரூட் இலைகளிலிருந்து எடுக்கப்படும் சாறுகளைச் சிதைவடையாமல் பாதுகாத்து, அவற்றை அழகு சாதனப் பொருட்கள் மற்றும் உணவுத் தயாரிப்புகளில் பயன்படுத்தும் அதிநவீன தொழில்நுட்பமும் தற்போது ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆக, விவசாயத்தில் விரயம் என்பதே இல்லை என்ற நிலை விரைவில் வரப்போகிறது.

