/
இணைப்பு மலர்
/
தீபாவளி மலர்
/
நீங்கள் 'சீட் மீல்ஸ்' சாப்பிடுபவரா: ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சொல்வதை கேளுங்க!
/
நீங்கள் 'சீட் மீல்ஸ்' சாப்பிடுபவரா: ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சொல்வதை கேளுங்க!
நீங்கள் 'சீட் மீல்ஸ்' சாப்பிடுபவரா: ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சொல்வதை கேளுங்க!
நீங்கள் 'சீட் மீல்ஸ்' சாப்பிடுபவரா: ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சொல்வதை கேளுங்க!
PUBLISHED ON : அக் 20, 2025

திவ்யா சத்யராஜ் நடிகர் சத்யராஜின் மகள், அண்மையில் அரசியல் கட்சி ஒன்றில் இணைந்தவர் என்பதை தாண்டி பிரபல ஊட்டச்சத்து நிபுணராக தன்னை நிரூபித்தவர். பெண்கள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வை பரப்பி வருகிறார். இவரது உணவு அறிவுரைகளை சமூக வலைதளத்தில் லட்சக்கணக்கானோர் 'பாலோ' செய்கின்றனர். இவரிடம் கேள்விகள் கேட்க, வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமாக 'ஏ.ஐ.,' உதவியை நாடினோம். 'ஏ.ஐ.,' தந்த கேள்விகளுக்கு திவ்யா தரும் பதில்கள் இங்கே...
நீண்ட ஆரோக்கியத்திற்கு நீங்கள் பரிந்துரைக்கும் உணவுகள்...
மைதா, வெள்ளை சர்க்கரை, கூல்டிரிங்ஸ், அடிக்கடி பாஸ்ட் புட் சாப்பிடுதலை தவிர்த்தாலே போதும். டயட் பின்பற்றுபவர்கள் ஒரே நாளில் மாற்றம் வந்து விடும் என்றில்லாமல் பொறுமையுடன் இருந்தாலே போதும். நாம் ஜெயிக்க உடல்நலம் அவசியம். இரவில் பிரியாணி போன்ற 'ஹெவியான' உணவுகள் பல்வேறு ஜீரணக்கோளாறு களுக்கு வழிவகுக்கும். நான் இரவுப்பணி மேற்கொள்ளும்போது பேரீச்சம், பாதாம் பருப்பு போன்றவற்றை எடுத்துக்கொள்வேன். கட்டாயம் 'குளூட்டன்' இல்லாத உணவை இரவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* ஏமாற்று உணவு (cheat meals) என்கிறார்களே, எடுத்துக்கொள்வது நல்லதா.
ஒருவர் தனது திட்டமிடப்பட்ட உணவு முறையில் இருந்து அவ்வப்போது விலகி, கொழுப்பு, சர்க்கரை அதிகமாக உள்ள விருப்பமான உணவுகளை எடுத்துக்கொள்வது 'சீட் மீல்ஸ்'. உடல் எடையை குறைப்பதற்கான பயணத்தில், நீண்ட நாட்கள் கட்டுப்பாடான உணவை எடுப்பது நம்மை மனதளவில் அயர்ச்சி ஆக்கிவிடும். எனவே சரியான திட்டமிடுதலுடன் வாரத்திற்கு ஒருமுறை பிடித்த உணவை 'சீட் மீலாக' சாப்பிடுவதால் தவறில்லை.
* நம் பாரம்பரிய உணவுகளில் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளனவா.
நம் உணவுகளில்கீரை, பயறு வகைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரலாம். பாசிப்பயறு தோசையில் வைட்டமின் 'டி' உள்ளது. முடியின் அடர்த்திக்கும், சருமத்தின் பொலிவுக்கும் தக்காளி சட்னி கூட உதவும்.
* சோஷியல் மீடியாவில் பரிந்துரைக்கும் 'டயட்களை' பின்பற்றலாமா.
ஒவ்வொருவருக்கும் உடலுக்கு ஏற்ற உணவு வகைகள் மாறுபடும். உதாரணத்திற்கு கர்ப்பிணிக்கும், பாடி பில்டருக்கும் ஒரே வித டயட்டைபரிந்துரைக்க முடியாது. என்னிடம் டயட் சார்ட் கேட்டு வருபவர்களிடம், 'ரத்தபரிசோதனை அறிக்கையுடன் வாருங்கள்' என்பேன். இது ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்களுக்கு ஏற்ற உணவுமுறையை பரிந்துரை செய்ய உதவும். தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் வேர்க்கடலை, காளிபிளவர் தவிர்க்க வேண்டும்.
மக்கள் நிறைய தேடலில் ஈடுபடுகிறார்கள். ஒமேகா 3 எடுத்துக்கொள்வதால் பக்க விளைவுகள் வருமா போன்ற சந்தேகங்களை கேட்கிறார்கள். குழந்தைகளுக்கான உணவு ரெசிபியை அழகாக கவரும் வண்ணத்தில் தரும்போது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார்கள்.
* ஊட்டச்சத்து நிபுணராக நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
ஆன்லைனில் வரக்கூடிய அறிவியல் ஆதாரமற்ற உணவுமுறைகளை மக்களிடம் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் உள்ளது. கீமோதெரபி நோயாளிகளுக்கான டயட் சார்ட் தயாரிப்பது சவாலானது; சிகிச்சையில் இருப்பவர்களுக்கு முன்பு பிடித்த உணவுகள் கூட பிடிக்காமல், ஒத்துக்கொள்ளாமல் போய்விடும். சிகிச்சை அளிக்கும்டாக்டர்களுடன் பேசி பக்கவிளைவுகள் இல்லாத உணவுமுறைக்கு கொண்டு வருவது சவாலாகவே இருக்கும்.
* நாத்திக குடும்பத்தில் இருந்தாலும் பண்டிகைகள் கொண்டாடுவது உண்டா.
பிறரின் நம்பிக்கைகளை எப்போதும் மதிக்க வேண்டும் என்று அப்பா கற்றுத்தந்திருக்கிறார். தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் என நண்பர்களுடன் கொண்டாடுவோம். சிறுவயதில் அப்பாவின் திரைப்படம் வரும் நாள் தான் எனக்கு திருவிழா. 'நடிகன்' படம் வந்த போது தியேட்டரில் ரசிகர்களின் கைதட்டலில் குடும்பமே ஆனந்தக் கண்ணீரில் இருந்தபோது, காமெடி படத்துக்கு வந்து ஒப்பாரி வைக்குறீங்க..! என கமெண்ட் வந்தது இன்னும் நினைவில்இருக்கிறது.
* சமூகப் பணியில், அரசியலில் ஈடுபட உங்களை துாண்டியது...
சிறுவயதில் இருந்தே கார், நகை எல்லாம் விரும்பியது இல்லை. பள்ளி படிக்கும்போதே வசதி இல்லாத மாணவர்களுக்கு என்னால் இயன்ற கல்வி உபகரணங்கள் வாங்கித் தருவது, விளையாடுவது என நேரம் செலவிடுவேன். பின் படிப்பு வேலை என காலம் ஓடி விட்டது; கை நிறைய சம்பாதித்த பின்பும் கூட மனநிறைவு இல்லாமல் இருந்ததை உணர்ந்தேன். பின் நண்பர்களுடன் சேர்ந்து 'மகிழ்மதி' தொண்டு நிறுவனம் துவங்கி வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கி வருகிறோம்.இப்போது அரசியலிலும் தீவிரமாகி விட்டேன்.
இன்ஸ்டாகிராம்: @divya_sathyaraj

