/
இணைப்பு மலர்
/
தீபாவளி மலர்
/
துருக்கி இனிப்பு பக்லாவாவும், மகாராஷ்டிரா மட்டன் லபப்தாரும்!
/
துருக்கி இனிப்பு பக்லாவாவும், மகாராஷ்டிரா மட்டன் லபப்தாரும்!
துருக்கி இனிப்பு பக்லாவாவும், மகாராஷ்டிரா மட்டன் லபப்தாரும்!
துருக்கி இனிப்பு பக்லாவாவும், மகாராஷ்டிரா மட்டன் லபப்தாரும்!
PUBLISHED ON : அக் 20, 2025

துருக்கி கிரவுன் பக்லாவா
பக்லாவா என்னும் இனிப்பு துருக்கி நாட்டில் பிரபலமானது. 15ம் நுாற்றாண்டுக்கு முன் இருந்து இந்த இனிப்பு வகை மக்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மத்திய ஆசியா, வட ஆப்ரிக்கா, தென் கிழக்கு ஐரோப்பா பகுதிகளில் மிகவும் பிரபலமாகி வருகிறது.
தேவையான பொருட்கள்
மைதா - 2.5 கப்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பட்டர் - 125 கிராம்
சீனி - 1.5 கப்
பாதாம் - 50 கிராம்
பிஸ்தா - 50 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
சோளமாவு - தேவையான அளவு
மைதா மாவுடன் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து பிசைந்து 25 நிமிடம் ஊற வைத்து கொள்ள வேண்டும். ஊற வைத்த மாவை 25 சிறிய உருண்டைகளாக உருட்டி கொண்டு, ஒவ்வொரு உருண்டைகளையும் பூரிக்கு தேய்ப்பது போல் சோளமாவு சேர்த்து மெல்லியதாக தேய்த்து வைக்க வேண்டும். தேய்த்து வைத்த மாவுடன் உருக்கிய வெண்ணெயை அதன் மீது தடவி ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்க வேண்டும். குக்கீஸ் கட்டர் மூலம் வட்ட வடிவு அல்லது சதுர வடிவில் கட் செய்துவிட வேண்டும். பேக்கிங் ஓவன் தட்டில் வெண்ணெய் தடவி கட் செய்த மாவை அதன் மீது வைத்து 180 டிகிரியில் 55 நிமிடம் வேக வைக்க வேண்டும். பக்லாவை 20 நிமிடம் குளிர வைக்க வேண்டும். மிக்ஸியில் பாதாம், பிஸ்தாவை அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர், ஒன்றரை கப் சீனியை கலந்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த சீனி பாகுவை குளிர வைக்க வேண்டும். ஓவனில் வெந்த பக்லாவா மீது இந்த சீனி பாகுவை ஊற்ற வேண்டும். அதனுடன் அரைத்து வைத்த பாதாம், பிஸ்தா கலவை துாவ வேண்டும். சுவையான கிரவுன் பக்லாவா தயார்.
இங்கிலாந்து இன்பியூஸ்ட் சிக்கன்
எளிதாக தயாரிக்கும் சிக்கன் உணவு. முதலில் இங்கிலாந்தின் லண்டனில் தான் இதனை சமைத்தார்கள்.
தேவையான பொருட்கள்
முழு கோழி - 1
வினிகர் - 4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 20
பூண்டு - தேவையான அளவு
பெரிய வெங்காயம் - 3
சிவப்பு குடை மிளகாய் - 3
மிளகு - 2 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
முழு கோழியை தோல் உரித்து வைத்து கொள்ளவும். வினிகர், தேவையான அளவு உப்பு சேர்த்து கோழியின் அனைத்து பகுதிகளிலும் தேய்த்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
சிறிய பாத்திரத்தில் சுடு தண்ணீருடன் 20 காய்ந்த மிளகாய் போட்டு 5 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு பூண்டு, பெரிய வெங்காயம், சிவப்பு குடை மிளகாயை வெட்டி வதக்கி வைத்து கொள்ளவேண்டும். பின் மிக்ஸியில் ஊறவைத்த காய்ந்த மிளகாய், கடாயில் வதக்கியது சேர்த்து மிளகு துாள், தக்காளி சாஸ் 2 ஸ்பூன் சேர்த்து அரைத்து பேஸ்ட் எடுக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை ஏற்கனவே ஊற வைத்த கோழியில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
மிக்ஸியில் சீஸ், மில்க் கிரீம், இத்தாலியன் ஸ்பைசஸ் சேர்த்து அரைத்து சாஸ் போல் எடுக்க வேண்டும். ஊற வைத்த சிக்கனை ஓவனில் 200 டிகிரி ஹீட்டில் ஒரு மணி நேரம் பேக் செய்ய வேண்டும். வெந்த சிக்கனில் ஊசி மூலம் அனைத்து பகுதிகளிலும் சாஸை செலுத்த வேண்டும்.
மீண்டும் பேக்கிங் ஓவனில் 5 நிமிடம் வைக்கவும். மீண்டும் வெளியே எடுத்து பட்டர், இத்தாலியன் ஸ்பைசஸ் தேய்த்து விட்டால் இன்பியூஸ்ட் சிக்கன் தயாராகி விடும்.
மகாராஷ்டிரா மட்டன் லபப்தார்
மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்படும் விசேஷ உணவு வகை மட்டன் லபப்தார். இது சாதம், ரொட்டி, சப்பாத்தி போன்றவற்றுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
மட்டன் - 800கிராம்
தயிர் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் துாள் - 2 ஸ்பூன்
மஞ்சள் துாள் - அரை ஸ்பூன்
சீரக துாள் - 1 ஸ்பூன்
மல்லி துாள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
மல்லி துாள் - 2 ஸ்பூன்
இவற்றை ஒன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய், எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி, ஒரு கருப்பு ஏலக்காய், 3 பச்சை ஏலக்காய், 4 கிராம்பு, கொஞ்சம் மிளகு, பட்டை சேர்த்து வறுக்க வேண்டும். வறுத்த பின் 3 பச்சை மிளகாய் வெட்டி போட வேண்டும்.
பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்க்க வேண்டும். மிதமான சூட்டில் இஞ்சி, பூண்டு கலவையை இதனுடன் சேர்க்க வேண்டும். வேக வைத்த தக்காளியை அரைத்து இதனுடன் சேர்க்க வேண்டும். மிதமான சூட்டில் இதை கிளறி கொண்டு இருந்தால் எண்ணெய் படலம் மேல் வரும்.
இந்த நேரத்தில் ஊற வைத்துள்ள மட்டன் கலவையை சேர்த்து கொஞ்சம் கொதிக்க விட வேண்டும். 30 நிமிடம் மிதமான சூட்டில் மூடி வைத்து வேக விட வேண்டும். பின் நன்கு வறுத்த வெங்காயத்தையும், தேவையான அளவு சுடு தண்ணீரையும் சேர்த்து பத்து நிமிடம் மீண்டும் வேக வைக்க வேண்டும். கடைசியாக 4 ஸ்பூன் மில்க் கிரீம், 2 ஸ்பூன் பட்டர் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து திறந்தால் மட்டன் லபப்தார் தயாராகி விடும்.
சிக்கன் மந்தி பிரியாணி
இது அரேபிய உணவு வகை. இதில் சிக்கன், மட்டன் என இரு வகைகளில் சமைக்கலாம். சிக்கன் மந்தி பிரியாணி தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - - 1 கிலோ
பாஸ்மதி அரிசி -- 3 கப்
வெங்காயம் -- 2 (நறுக்கியது)
தக்காளி -- 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது -- 2 டீஸ்பூன்
மந்தி மசாலா -- 3/-4 டீஸ்பூன் (கலவை)
மஞ்சள் தூள் -- 1/2 டீஸ்பூன்
உப்பு -- தேவைக்கேற்ப
எண்ணெய், நெய் -- தேவைக்கேற்ப
கிராம்பு, பட்டை, ஏலக்காய் -
தேவையான அளவு
பச்சை மிளகாய் - - 2-3 (கீறியது)
உலர் திராட்சை, முந்திரி -- சிறிதளவு
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். முதலில் மந்தி மசாலா தயார் செய்ய வேண்டும். சிக்கனை மஞ்சள்தூள், உப்பு, சிறிது எண்ணெயுடன் தயாரித்து வைத்த மந்தி மசாலா சிறிது கலந்து ஊற வைக்க வேண்டும். பாஸ்மதி அரிசியை கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சூடாக்கி ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு வேகும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
பிரியாணி செய்ய தேவையான பாத்திரத்தில் நெய்யுடன் தக்காளி சேர்த்து வதக்கி மந்தி மசாலா, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் ஊற வைத்த அரிசியை சேர்க்க வேண்டும். அரிசி வெந்தவுடன் வறுத்து வைத்த சிக்கனை அதன் மேல் வைத்து மீதமுள்ள மசாலா, நெய் சேர்த்து மூடி மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.
சூடான சிக்கன் மந்தி பிரியாணி மீது உலர் திராட்சை, முந்திரி தூவி மூடி வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து சுவையான சிக்கன் மந்தி பிரியாணியை பரிமாறலாம்.

