/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
மறைந்து மழையாய் பிறக்கும் ஜமீன்- போட்டோவோடு சுற்றும் கிராமம்
/
மறைந்து மழையாய் பிறக்கும் ஜமீன்- போட்டோவோடு சுற்றும் கிராமம்
மறைந்து மழையாய் பிறக்கும் ஜமீன்- போட்டோவோடு சுற்றும் கிராமம்
மறைந்து மழையாய் பிறக்கும் ஜமீன்- போட்டோவோடு சுற்றும் கிராமம்
PUBLISHED ON : ஜன 15, 2015

மழை வேண்டி பல்வேறு வினோத நடைமுறைகளை விவசாயிகள் பின்பற்றுவதை நாம் பார்த்திருப்போம். நாம் பார்க்கவிருப்பதும் அதுபோன்ற வினோதங்களில் ஒன்று தான். ஆனால் அதில் கொஞ்சம் விசுவாசமும் கலந்திருப்பது இந்த கிராமத்தின் ஸ்பெஷல். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூர்.
1790ல் எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, சின்ன ஓவுலாபுரம், அப்பிபட்டி, வேப்பம்பட்டி கிராமங்கள் ஜமீன் கட்டுப் பாட்டில் இருந்தன. 59 சதுர கி.மீ., பரப்புள்ள அந்த ஜமீனை நிர்வகிக்க 3 ஏக்கர் பரப்பில் எரசக்கநாயக்கனூரில் அரண்மனை கட்டப்பட்டது. அடுத்தடுத்து கால
மாற்றத்தில் ஜமீன் முறை மாற்றப்பட்டாலும் அவ்வழியில் வந்த வாரிசுகளுக்கு கிராமத்தில் மரியாதை உண்டு.
ஐந்தாவது வாரிசான கதிர்வேல்பாண்டியன் தன் 24வது வயதில் இறந்தாலும் அவர் மக்களிடம் காட்டிய அன்பும், ஆதரவாலும் அவரை கிராம மக்கள் தெய்வமாக வழிபடத் தொடங்கினர். தங்கள் கிராமத்தை வறுமையிலிருந்து மீட்கும் சக்தி கதிர்வேல்பாண்டியன் ஜமீனுக்கு உண்டு என்பது எரசக்கநாயக்கனூர் மக்களின் நம்பிக்கை. அவரை வழிபட்டால் மழையாய் வந்து தங்கள் வறட்சியை போக்குவார் என்பதை இன்றும் நம்புகின்றனர்.
மழை பொய்க்கும் காலங்களில் கதிர்வேல்பாண்டியனின் போட்டோவிற்கு பூஜை செய்து அதை எடுத்து ஒரு முறை ஊர்சுற்றி வந்தால் மூன்று முறை மழை பெய்யும் என்பது அவர்களின் நம்பிக்கை. கடந்த மூன்று மாதத்திற்கு முன் பருவ மழை பொய்த்த போது ஊர் கூடி ஜமீன் போட்டோ உடன் ஊர் சுற்றிவர முடிவு செய்தனர். அதன் விளைவு தான் மூன்று மாதங்களாக மழை கொட்டி வருவதாக அவர்கள் நம்புகின்றனர். அங்குள்ள சிலரிடம் இந்த வினோத நடைமுறை குறித்து கேட்டோம்...
ஒன்பதாவது ஜமீன் மாரி ரத்தினப்பாண்டியன் இதை கேட்டால் நம்ப சிரமமாக இருக்கும். ஆனால் அது தான் உண்மை. மழையில்லாத காலங்களில், இறந்த ஜமீன் எங்களை காப்பாற்றி உள்ளார். இதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். இதை மூடநம்பிக்கையாக கூறினால் நாங்கள் ஏற்கமாட்டோம்.
இந்த வழக்கம் வேண்டாம். இளைஞர்கள் நம்பாமல் கிண்டல் செய்வார்கள் என்று மறுத்தேன். ஆனால் ஊர் பெரியவர்கள் கிராம நலன் கருதி செய்ய முயற்சிப்போம் என்றனர். அதன் பிறகு நானும் சம்மதித்தேன். தாத்தா போட்டோ உடன் ஊர் சுற்றினோம். மழையும் வந்ததும். எது எப்படி இருந்தாலும் நம்பிக்கை பொய்க்கவில்லை.
அது தானே வாழ்க்கை, என்றார்.
தொடர்புக்கு: 96550 70466.