sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

'விக்' விற்கும் இன்ஜினியர் - செட்டிநாட்டில் இப்படியும் ஒரு தொழில்

/

'விக்' விற்கும் இன்ஜினியர் - செட்டிநாட்டில் இப்படியும் ஒரு தொழில்

'விக்' விற்கும் இன்ஜினியர் - செட்டிநாட்டில் இப்படியும் ஒரு தொழில்

'விக்' விற்கும் இன்ஜினியர் - செட்டிநாட்டில் இப்படியும் ஒரு தொழில்


PUBLISHED ON : ஜன 15, 2024

Google News

PUBLISHED ON : ஜன 15, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செட்டிநாடு என்றால் சமையல், பலகாரங்கள், பாரம்பரிய கட்டடக்கலையை பறைசாற்றும்

கட்டடங்கள் தானே நினைவுக்கு வரும். ஆனால் தலைக்கு வைக்கும் 'விக்' உற்பத்தியில் சிறப்பிடம் பெற்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் காரைக்குடியில் நடக்கிறது.

தலைமுடியில் அதிக கவனம் செலுத்தாதவர் யாரும் இல்லை.

தலைமுடி நீளமாகவும் சுருள் சுருளாகவும் இருந்தால் தனி அழகைப் பிரதிபலிக்கும். எவ்வளவு தான் பொருளாதாரத்திலும், சமுதாயத்திலும் பெரிய அந்தஸ்தில் இருந்தாலும், தலையில் முடி இல்லாத பிரச்னை பலரை கலங்கடிக்க தான் செய்கிறது. அவர்களுக்கான ஆபத்பாந்தவன் தான் இந்த 'விக்'.

உலக நாடுகளில்இந்திய தலை முடிக்கு அதிக கிராக்கி இருக்கிறது. ஆண்டுக்கு ரூ. ஆயிரத்து 500 கோடி மதிப்பில் 'விக்' ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை உணர்ந்த காரைக்குடியைச் சேர்ந்த இன்ஜினியர்சிவக்குமார்,ஜெர்மனியில் செய்த வேலையை உதறிவிட்டு, தலைமுடி ஏற்றுமதி தொழிலில் சாதித்து வருகிறார். அவர் கூறியது...

காரைக்குடியில் 1980களில் எனது தந்தை பேன்சி கடை நடத்தி வந்தார். அதில் சவுரி முடி விற்பனை சிறப்பாக நடந்தது. திடீரென்று தலைமுடி கிடைப்பதில் கிராக்கி நிலவியது.

விசாரித்த போது இந்தியாவில் இருந்து தலைமுடி வெளிநாடுகளுக்கு

ஏற்றுமதி செய்யப்படுவது தெரிந்தது. எனது தந்தையும் சிறிய அளவில்

தலைமுடி ஏற்றுமதி தொழிலை தொடங்கினார். நான் ஜெர்மனியில் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை செய்து வந்தேன்.

திருமணத்திற்காக காரைக்குடிக்கு வந்த போது தான் இந்த தொழிலில் அதிக டிமான்ட் இருப்பதை அறிந்தேன். அதில் ஆர்வம் செலுத்தினேன். வெளிநாடுகளில் தலைமுடி கிடைப்பதில்லை.

இந்திய பெண்களைப் போல் பல நாடுகளில் பெண்களுக்குநீளமான முடி வளர்வதில்லை. தென்னிந்திய பெண்கள் தங்கள் தலைமுடியை கோயிலுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். எனவே வெளிநாட்டிற்கான முடிதேவையை அதிகம் நாம் தான் அளிக்கிறோம்.

திருப்பதி, பழநி, சமயபுரம் கோயில்களில் டெண்டர் மூலம் விடப்படும் தலைமுடியை

வாங்குகிறேன். அந்த தலைமுடி சுத்திகரிக்கப்பட்டு மென்மையான முடியாக மாற்றப்படுகிறது. கிளிப், ஸ்டிக்கர் என இரு வகைகளில் விக் தயார் செய்யப் படுகிறது. தையல் மிஷின்கள் மூலம் உருவாகும் விக்குகள், கை வேலைப்பாடு மூலம் உருவாகும் விக்குகளும் உள்ளன.

வெளிநாடுகளுக்கு கருப்பு, வெளிர்மஞ்சள் நிறங்களில் விக் அனுப்பப்படுகிறது. தலைமுடி

இல்லாதவர்களுக்கு தலைமுடியை நடும் 'ஹேர் எக்ஸ்டென்ஷன்' தொழில்நுட்பம் வெளிநாடுகளில் மட்டுமே இருந்தது. தற்போது இந்தியாவில் பெரிய நகரங்களில் வந்துவிட்டது. எனவே தலைமுடிக்கு டிமான்ட் எப்போதும் உண்டு.

நாங்கள் வெளிநாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்கிறோம். சுத்திகரிக்கப்பட்ட தலைமுடி 1 கிலோ ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. முழுமையடைந்த தரமான விக் ரூ. 20 ஆயிரத்தில் தொடங்கி ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இத்தொழில் மூலம் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு தந்துள்ளேன்.

தலைமுடி ஏற்றுமதி தொழிலில் இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருப்பது சீனா. ஆனால் சீனாவிற்கே இந்தியாவில் இருந்து தான் தலைமுடி அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தவிர பெண்கள் தலை சீவும் போது துாக்கி வீசும் சிக்கலான தலைமுடிக்கு சுட்டி முடி என்று பெயர். இந்த சுட்டி முடிக்கு சீனாவில் ஏகப்பட்ட மவுசு உண்டு. பல இடங்களில் இந்த சுட்டி முடியை சேகரித்து சில இந்திய நிறுவனங்கள் சீனாவுக்கு அனுப்புகின்றன.

இத்தொழிலில் அதிக தொழில்நுட்பங்களை சீனா கையாளுகிறது. அதனால் அங்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வரை தலைமுடி ஏற்றுமதி நடக்கிறது. ஆனால் இந்தியாவில் நவீன தொழில்நுட்பம் வரவில்லை. மத்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் இந்த ஏற்றுமதி

தொழிலுக்கு வரி கிடையாது. ஆனால் தோல் தொழிலில் வழங்கப்படும் சலுகைகள், பயிற்சிகள் இந்த தொழிலுக்கு வழங்கப்படுவதில்லை. தலைமுடி ஏற்றுமதி தொழிலுக்கு அரசு ஒத்துழைப்பு வழங்கினால் ஏற்றுமதி பெருகும் என்றார்.






      Dinamalar
      Follow us