PUBLISHED ON : ஜூன் 05, 2015

அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் மூளும் சூழ்நிலை நிலவியபோது நாட்டின் ஜனாதிபதி தேர்வு பற்றி விவாதம் வந்தது. அப்போது அந்தப் பதவிக்குத் தகுதியானவர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட போது சிலர் ஆபிரகாம் லிங்கனின் பெயரைக் குறிப்பிட்டனர். அப்போது அங்கிருந்த ஒருவர் சொன்னார்.
'ஆபிரகாம் லிங்கனிடம் நண்பர்கள் நிறைய இருக்கிறார்கள். வேறு எதுவும் அவரிடம் இல்லை' என்றார். அதுவே அவரது பலமாக அமைந்தது.
லிங்கனின் இளமைப்பருவத்தில் தெருச் சண்டை போடும் வாலிபனாகச் சுற்றித் திரிந்தார். தவறு செய்யவும் பயப்படவில்லை. இப்படிச் சில காலமிருந்தபோது ஓர் அழகான பெண்ணைச் சந்தித்தார். அவள்மீது அவருக்குக் காதலும் உண்டானது. அந்தப் பெண்தான் அவரை அப்போது திருத்தினாள். நல்ல நட்புப் பற்றியும் எடுத்துரைத்தாள். அந்த நல்ல நட்பென்னும் பண்பின் மூலமே அமெரிக்க அதிபராகவும் அவரை உயர்த்திக் கொள்ள முடிந்தது.
