PUBLISHED ON : மே 31, 2013

அமெரிக்க அதிபர் ஒபாமா எழுதிய புத்தகங்கள் விற்பனையில் சாதனை படைத்து வருகின்றன.
பிரபலமான புலிட்சர் விருதைப் பெற்ற எழுத்தாளர் பாப் உட்வார்டு, ஒபாமாவைப் பற்றி எழுதிய 'ஒபாமாவின் யுத்தங்கள்' புத்தகம் அதிக அளவில் விற்பனையாகிறது. அந்தப் புத்தகத்திற்கு மக்களிடையே வரவேற்பு உள்ளதால், முன்பதிவு செய்து பலரும் அதை வாங்கி வருகின்றனர்.
464 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகம் இந்தியாவில் 970 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதற்கு அடுத்ததாக, ஒபாமா எழுதிய 'என் தந்தையின் கனவுகள்' என்ற புத்தகம் அதிக அளவில் விற்பனையாகிறது.
இந்தப் புத்தகம் ஒபாமாவின் சுயசரிதைப் புத்தகமாகும். 1995ம் ஆண்டு வெளியானது. மேலும், 2006ம் ஆண்டு ஒபாமா எழுதிய, 'நம்பிக்கையின் துணிச்சல்' என்ற புத்தகமும் அதிக அளவில் விற்பனையாகிறது.
மேலும், ஒபாமாவைப் பற்றிய அனைத்துப் புத்தகங்கள் தவிர, ஒபாமாவின் மனைவி மிச்சேல் எழுதிய புத்தகங்களும் விற்பனையில் புதிய சாதனையைப் படைத்து வருவதாக விற்பனை யாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தினசரி சுமார் 100 என்ற அளவில் ஒபாமாவைப் பற்றிய புத்தகங்கள் விற்பனையாவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
