PUBLISHED ON : செப் 21, 2018

அ நிறம் | அளவு
திண்டுக்கல் மாவட்டம், அம்மாபட்டி கிராமத்தில், 6ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு!
எங்கள் கணக்கு ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். வீட்டுப் பாடம் செய்யாமல் வரும் மாணவர்களை, உப்புக்கல் மீது, முட்டி போட வைப்பார். ஒரு நாள், அவர் கொடுத்த கணக்கு எனக்கு தெரியவில்லை; அதனால் போடவில்லை. வகுப்புக்கு சென்றால், முட்டி போட வைப்பார் என, பயந்து, பள்ளிக்கு செல்லவில்லை. 'தலைவலி' என்று பொய் கூறி, வீட்டில் படுத்திருந்தேன்.
உடனே, என் சித்தி, பூண்டை அரைத்து, நெற்றியில் பற்றுப் போட்டார். நெற்றி எரிந்து, சில மணிநேரத்தில் லேசான புண்ணாகியது.
'பள்ளிக்கு சென்றிருந்தால், இப்படி வேதனை அனுபவித்திருக்க மாட்டோமே' என்று வருந்தினேன்.
இப்போது என் வயது, 60. இந்த நிகழ்வை நினைத்தால், வாய்விட்டு சிரித்து விடுவேன்.
- ந.தனலட்சுமி, ராஜபாளையம்.
