தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பாசக்கார பயபுள்ள!

பாசக்கார பயபுள்ள!

பாசக்கார பயபுள்ள!


PUBLISHED ON : பிப் 26, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 26, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு பூனை 3000 மைல்களுக்கு அப்பால் சென்றுவிட்ட தன் எஜமானனை நடந்தே சென்று தேடிக் கண்டு பிடித்த அதிசயத்தைக் கேளுங்கள்.

கலிபோர்னியாவிலுள்ள பஸடெனாவைச் சேர்ந்தவர் 'சார்லஸ் பி.ஸ்மித்' என்பவர். இவர் டாம் என்ற பூனையை வளர்த்தார். இவர் பிளோரிடாவைச் சேர்ந்த ஸெயின் பீட்டர்ஸ் பர்க்கில் முதலில் வசித்து வந்தார்.

1949ல் அங்கிருந்து பஸடெனாவிற்குக் குடும்பத்துடன் போய் விட்டார். போகும் போது பூனை டாமை நண்பர்களின் பாதுகாப்பில் விட்டுச் சென்றார். இரண்டு வாரங் கழித்து நண்பர்களிடமிருந்து டாமை காணவில்லை என்று ஸ்மித்திற்கு ஒரு கடிதம் வந்தது.

ஆகஸ்ட் மாதம் 1951ம் வருடம், 1ம் தேதி ஸ்மித் தன் வீட்டு கதவினருகில், 'மியாவ்' சத்தம் கேட்டுத் திறந்தார். வாசலில் நின்று கொண்டிருந்த டாம் குபீரென்று தன் எஜமானனின் மீது பாய்ந்து ஏறிக் கொண்டது.

தன் சொந்த வீட்டையும், சொந்த எஜமானரையும் அடைந்த டாம் 3 வாரம் வரை எழுந்திருக்காமல் தூங்கிற்று. அதன் ரோமம் சூரிய வெப்பத்தினால் அப்படியே உதிர்ந்து போய் விட்டது. பாதங்கள் கொப்பளித்து வெடித்துப் போயிருந்தன. என்ன கஷ்டப்பட்டாலென்ன? டாம் இரண்டு வருஷம் ஆறு வாரங்கள் நடந்து தன் எஜமானனைக் கண்டுபிடித்து விட்டதே!

வாவ்... என்னவொரு பாசம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us