PUBLISHED ON : நவ 30, 2019

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
சோற்று கற்றாழை ஜெல் - 100 கிராம்
பீட்ரூட் - 100 கிராம்
பனை வெல்லம் - 200 கிராம்
முந்திரி, திராட்சை - சிறிதளவு
நெய், கேசரி பவுடர், ஏலப்பொடி,
தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
சுத்தம் செய்த பீட்ரூட், கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு அரைத்து கலவையாக்கவும். கடாயில் நெய் ஊற்றி சூடானதும், கலவையை போடவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்.
வெந்ததும், பனைவெல்லம், கேசரி பவுடர், ஏலப்பொடி போட்டு, பதம் வரும் வரை கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து இறக்கவும்.
சுவைமிக்க, 'கற்றாழை பீட்ரூட் அல்வா' தயார். சத்துக்கள் நிறைந்தது. குழந்தைகள் விரும்பி உண்பர்.
- ஜெ.காயத்ரி, திண்டுக்கல்.
