PUBLISHED ON : நவ 06, 2021

மருத்துவமனைகளில் நோய்க்கிருமிகளை எதிர்க்க, துணிகளை ஆவி முறையில் வெளுத்து பயன்படுத்துகின்றனர்; மருந்துக் கலவையை தெளித்து நச்சுக்கிருமிகளை அழிக்கின்றனர்.
குறிப்பாக, அறுவை சிகிச்சை அரங்கில் மிக சுத்தமான துணிகளை பயன்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் பயன்படுத்துவதற்கு புது வித துணியொன்றை, ஐரோப்பியா நாடான பிரான்சில் கண்டறிந்துள்ளனர்.
இது சாதாரண பருத்தி நுாலால் நெய்யப்பட்டது. நெய்த பின், அமோனியா கலவையில், நன்கு அலசப்படும். அந்த கலவை, பருத்தியில் உள்ள, செல்லுலோசுடன் கலந்து விடும்; அதனால், அந்த துணி எப்போதும், கிருமி இன்றி சுத்தமாக இருக்கும்; அறுவை சிகிச்சை அரங்கில் பயமின்றி பயன்படுத்தலாம்.
இந்த துணி, தண்ணீர் மற்றும் நெருப்பால் பாதிக்கப்படுவதில்லை. பருத்தி நுாலை தவிர, வேறு எந்த செயற்கை இழை துணியுடனும், அமோனியக் கலவையை சேர்க்க முடியாது.
