தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கட்டுரை

கட்டுரை

கட்டுரை


PUBLISHED ON : பிப் 03, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 03, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமைதியான ராட்சசர்கள்!

சவ்ரோபாட்ஸ் எனப்படும் டயனோசர்களுக்கு சிறிய தலை, பெரிய உடம்பு, நீண்ட கழுத்தும் வாலும் உண்டு.

ஆள் தாதா... பல் சோதா!

தாவரஉண்ணி டைனோசர்கள்தான், உலகில் வாழ்ந்த விலங்குகளில் எல்லாம் மிகப் பெரியது. பாரோசரஸின் ஒரு கால் தடத்தில் நீங்கள் உங்கள் கால்தடத்தை வைப்பதாக எண்ணி பாருங்கள். அந்த கால் தடம் ஒரு குளியல் தொட்டிக்கு ஈடான அளவில் இருக்கும். மிகப் பெரிய உருவம் கொண்ட, சைவ டைனோசரின் பெயர், சவ்ரோபாட்ஸ் ஆகும். ஆனால், இந்த டைனோசர் மிக அமைதியானது.

வேலைக்காகாத பற்கள்!

பல பெரிய சைவ சவ்ரோபாட்ஸ்களின் பற்கள், பலமற்றதாய் இருந்தன. அதனால், அவைகள் தாவரங்களை மென்று உண்ணாமல், அப்படியே விழுங்கிவிடும். வயிற்றில் உள்ள உணவை அரைக்க 'கேஸ்ட்ரோலித்' என்ற கற்களை விழுங்கும். இவை கடின தாவரங்களை கூட அரைத்து கூழாக்கிவிடும்

எவ்ளோ நீளம்?

இந்த சவ்ரோபாட்ஸ் களின் கழுத்து, ஏன் இவ்ளோ நீளமாக உள்ளது என்பதற்கு உறுதியான விளக்கம் ஏதுமில்லை. ஆனால், நீளத்திற்கு சொல்லப்படும் மூன்று முக்கிய காரணங்களில் எதுவுமே காரணமில்லை என்பதுதான் வியப்பு.

தாவரங்கள் தப்ப முடியாது!

* இந்த பாரோசரஸ் ஒரு இடத்தில் நின்று இருக்க, நிலம் மற்றும் நீரில் உள்ள உணவை எடுக்க நீண்ட கழுத்து பயன்பட்டது.

* தண்ணீரில் பாரோசரஸ் இருக்கும்போது அதன் தலையில் உள்ள மூக்கு துவாரங்களால் சுவாசிக்கும் என்று நினைப்பீர்கள். ஆனால், அது அப்படியில்லை. காரணம், தண்ணீரில் அழுத்தம் காரணமாக அவைகளால் தலையை மேலே கொண்டு வருவதோ, சுவாசிப்பதோ இயலாது.

* பாரோசரஸ் மர உச்சிகளை உண்ணும். ஆனால், பாரோசரஸ் தன் கழுத்தை உயரமான மரத்தின் உச்சிக்கு கொண்டு சென்றால், கழுத்திற்கான ரத்த ஒட்டம் தடைப்பட்டு, அதனை மயக்க நிலைக்கு கொண்டு செல்லும்.

எந்த தாவரமும் சவ்ரோபாட்ஸிட மிருந்து தப்பவே முடியாது. நிலத்திலிருந்து 15 அடிகளுக்கு மேல் உயரமுள்ள தாவரங்கள் மட்டுமே இதன் வாயிலிருந்து தப்ப முடியும்.

கூம்பு போன்ற காய் காய்க்கிற மரங்களில்தான் இந்த பாரோசரஸ் மற்றும் பிற பல சைவ டைனோசர்கள் விரும்பி உண்ணும்.

பாரோசரஸ் கள்ளி செடிகளை கூட விட்டு வைப்பதில்லை. இச்செடிகள் எவ்வளவு கடுமையான வெப்பத்திலும் வளரும் அல்லவா?

குறைவான ஆனால், பெரிய இலைகளை கொண்ட செடி வகைகள் சிறிய முதல் பெரிய-மரம் வரை அளவில் வேறுபடும். ஆனால், பாரோசரஸிடமிருந்து, எந்த உயரமான தாவரமும் தப்பாது.

பிரம்மாண்ட கால்கள் பாரோசரஸின் மிக பிரம்மாண்ட உருவத்தின் எடையை தாங்க உதவுகிறது.

இந்த நீண்ட வால் எதிரியை நிலை குலைய வைக்க உதவுகிறது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் பாரோசரஸின் உடல் பேலன்ஸிற்கு இது உதவுகிறது.

அதன் பாதம் தட்டையாக மெத்தை போன்ற மேல்புறத்துடன், யானை பாதத்தை போலவே இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us