தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஜூலை 06, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 06, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

என் பிரெண்ட் போல யாரு மச்சான்!

உயிர் பிழைக்க எதிரி உயிரோடு இருந்தால்தான் வாழ முடியும் என்பதை ஒரு ஆய்வு விளக்கியுள்ளது. பூனையும், எலியும் பரம விரோதிகள் என்பது உலகுக்கே தெரியும். இந்த பூனையையும், எலியையும் நண்பர்களாக மாற்ற முடியுமா என்றால் முடியும் என்கிறார் அமெரிக்க ஆராய்ச்சியாளர் சாய்.

இதற்காக பூனையையும், எலியையும் தனது ஆய்வுக்கு அவர் எடுத்துக் கொண்டார். எலியை பார்த்ததுமே வெறி கொண்டு பாயும் எந்த பூனையையும், அப்பாவி எலி ஒன்றையும் மூன்று அறைகளாக பிரிக்கப்பட்ட ஒரு கண்ணாடி பெட்டியில் அடைத்தார். முதல் பெட்டியில் எலியையும், மூன்றாவது பெட்டியில் பூனையையும் அடைத்தார். நடுவில் இருக்கும் இரண்டாவது பெட்டியில்தான் இரண்டுக்கும் தேவையான உணவு இருந்தது.

பூனை அறையிலும், எலி அறையிலும் ஒரு பட்டன் இருந்தது. இந்த இரண்டு பட்டன்களையும் ஒரே நேரத்தில் அழுத்தினால்தான் நடுவில் உள்ள கதவு திறக்கும். அப்போதுதான் இரண்டும் உணவு இருக்கும் அறைக்கு வர முடியும். இந்த செயல் முறையை பல தடவை செய்து காட்டி, இரண்டு விலங்குகளுக்கும் புரிய வைத்தார். இரண்டையும் அரைபட்டினி யிலேயே வைத்திருந்தார். மூன்றரை மாதத்தில் 700 முறைக்கு மேல் எலியும், பூனையும் முயற்சி செய்து கடைசியாக கதவை திறந்து விட்டன. வெளியே வந்த பூனை அமைதியாக உணவை சாப்பிட்டது. எலியை கண்டுகொள்ளவில்லை. இப்படியே சிலமுறை போனது. பின்பு எலி சாப்பிட, பூனை பட்டனை அழுத்த வேண்டும் என்ற விதத்தில் பெட்டியை மாற்றி வடிவமைத்தார். அடுத்த மூன்று மாதத்தில் பூனை, எலியின் பசியை புரிந்து கொண்டு பட்டனை அழுத்தும் அளவுக்கு பழகி விட்டது. எலி உயிரோடு இருந்தால் தான், பூனை உயிரோடு இருக்க முடியும் என்ற நிலை. இதனால், இரண்டும் நண்பர்களாயின. அடுத்த சில நாட்களில் பூனையின் முதுகில் ஏறி விளையாடும் அளவுக்கு பூனையோடு எலி பழகிவிட்டது. இதே நிலையைத்தான் மனிதருக்கும் சொல்கிறார். எதிரி நன்றாக இருந்தால்தான், தானும் நன்றாக இருக்க முடியும் என்ற நிலை மனிதனுக்கு ஏற்பட்டால், எதிரியும் நண்பனாகி விடுவான் என்கிறார் சாய்.

ஒலி..... சத்தம்.... இரைச்சல்!

இரைச்சல் 130 டெசிபலை எட்டினால் நமது காதுகள் தாங்காது. பொத்திக் கொண்டு விடுவோம். டெசிபல் என்பது சத்தத்தின் அளவை அளவிட பயன்படும் ஓர் அலகு. ஒலி அலைகளின் பலத்தைக் குறிப்பது அது. காற்றில் இருக்கும் லட்சக்கணக்கான மாலிக்யூல்கள் ஒன்றோடு ஒன்று உரசி மோதிக் கொள்வதால் சத்தம் எழுகிறது. டெலிபோனை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம்பெல்லை பெருமைப்படுத்துவதற்காக விஞ்ஞானிகள் உருவாக்கிய வார்த்தைதான் டெசிபல் என்பது. ஒலி அலைகளில் கிரஹாம்பெல் கொண்ட ஆர்வம்தான் அவர் டெலிபோனை கண்டுபிடிக்கக் காரணமானது.

நம் அன்றாட வாழ்வில் நிகழும் சில நிகழ்வுகளின் டெசிபல் அளவு எவ்வளவு தெரியுமா? மரத்தின் இலைகள் காற்றில் லேசாய் அசைந்து ஒருவித சத்தத்தை உண்டாக்குகின்றன அல்லவா? அதன் அளவு 10 டெசிபல்கள். சில அடிகளுக்கு அப்பாலிருந்த ஒருவர் ரகசியக் குரலில் பேசினால் அது 20 டெசிபல். தொலைக்காட்சிப் பெட்டியை போட்டுவிட்டு ஒரு வீட்டின் சத்த அலைகளைக் கணக்கிட்டால் அது 50 டெசிபல். ஒரு கார் தொழிற்சாலையின் இரைச்சல் ஒரு டெசிபல். ஒரு நிமிடத்துக்கு 16 ஆயிரம் தடவைகள் சுழலும் விமானத்தின் 'புரொப்பெல்லர்கள்' ஏற்படுத்தும் ஓசை 120 டெசிபல்கள்.

பேசும் கலை!

நமது குரல் மற்றவர்கள் காதில் எப்படி விழுகிறது என்று யோசித்திருக்கிறீர்களா?

ஒரு செய்தித்தாளை எடுத்து ஒரு பாராவை படியுங்கள். அதை ஓர் ஒலி நாடாவில் பதிவு செய்து கொண்டு மீண்டும் அதைப் போட்டுப் பாருங்கள். குரலை ரொம்பவும் உயர்த்தியிருக்கிறீர்களா?

வார்த்தைகளைச் சேர்த்துச் சேர்த்துப் படிக்கும் பழக்கம் இருக்கிறதா? வாக்கிய முடிவில் தெளிவு இல்லாமல் குரல் மங்கிவிடுகிறதா? மூக்கால் பேசுவது போல் குரல் தொனிக்கிறதா? சாதாரணமாக ஒருவரது குரலில் இந்தக் குறைபாடுகள் காணப்படுவதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். இவற்றை நம்மால் திருத்திக் கொள்ள முடியுமா? நிச்சயமாய் முடியும்!

உரத்த குரல் ஏற்படுவதற்குக் காரணம் என்ன தெரியுமா? தொண்டையின் சதைப்பகுதிகளில் இறுக்கம் இருப்பதுதான். அதற்குத் தொண்டையைச் சரி செய்ய வேண்டும். தலையைச் சற்று முன்னால் தளர்த்திக் கொண்டு முதலில் வலது பக்கமும், பின்னர் இடது பக்கமுமாய் மூக்கால் பேசுவது போல் குரல் இருப்பதற்கு பிடிப்பான தாடைப்பகுதிகளும்தான். பேசும்போது வாயை நன்கு முழுமையாகத் திறக்காவிட்டால், சத்தம் மூக்கின் வழியே தப்பித்துக் கொண்டு விடுகிறது. இதற்கு, பேசுவதற்கு முன் நன்றாக வாயைத் திறந்து 'ஆ' என்று சத்தமிட்டுப் பழகலாம். பிடிப்பான தாடைப் பகுதியை ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்துக்கு அசைத்துப் பழக வேண்டும். தெளிவாகப் பேசும் பழக்கத்தை வளர்க்க வல்லுனர்கள் தரும், 'டிப்ஸ்கள்' இவை:

* ஒவ்வொரு வாக்கிய முடிவிலும் நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடிக்காவிட்டால் குரலின் தொனியைக் குறைக்காதீர்கள்.

* பேசும்போது அடிக்கடி உம், ஆ, இர், வந்து என்று சொல்வதைத் தவிர்த்து விடுங்கள்.

* வாக்கிய முடிவின்போது குரலை உயர்த்தாதீர்கள். அப்படி செய்வதால், நீங்கள் ஏதோ கேள்வி கேட்பது போலப்படும். இல்லாவிட்டால் நீங்கள் சொல்லும் விஷயத்தில் உங்களுக்கே நம்பிக்கை இல்லாதது போலப்படும்.

* குரலின் தொனியில் எச்சரிக்கையாய் இருங்கள். ஏனெனில், தொனிதான் எவ்வளவு பெரிய விஷயத்தையும் வெளிப்படுத்தும்.

* பேச்சின் நடுவே ஆழ்ந்த சுவாசத்தை இழுக்க வேண்டும் போலிருந்தால் அதற்குத் தயங்காதீர்கள்.

* தொலைபேசியில் பேசும்போது சட்டென்று பேச்சை நிறுத்தாதீர்கள். அப்படி நிறுத்தினால், பேசி முடித்து விட்டார்கள் என்று போனை வைத்து விடுவர்.

அன்புடன் அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us