PUBLISHED ON : ஏப் 25, 2014

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
வெளிச்சமும் நடுக்கமும்!
நிலநடுக்கம், மனித உயிரைப் பறிக்கும் மிகப் பெரும் சக்தி இதற்கு உண்டு. பெரும்பாலான நிலநடுக்கங்கள் சிறிய அளவில் வந்தாலும், வராது வந்த மாமணி போல் திடீரென ஏற்படும் மிகப் பயங்கரமான நிலநடுக்கங்கள் பெரும் பேரழிவை ஏற்படுத்துகின்றன. ஆனால், நிலத்தில் ஏற்படும் அதிர்வு களுக்கு வானத்தின் சில அம்சங் கள் துணை போகின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்படுத்து வதற்கு முன்பு வானில் தோன்றும் வெளிச்ச கீற்றுகள், பூமியில் ஏற்படும் அசைவு களால் இருக்கலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறு கின்றனர். சமீபத்தில் சீனா மற்றும் இத்தாலியில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கங் களுக்கு முன்பு வானில் வெளிச்சம் ஏற்பட்டது. பூமி யில் இருக்கும் மண் படிமங்கள் நகர்வதால் மாபெரும் மின்சார சக்தி உருவாகி அதனால் இந்த வெளிச்சப் பொறிகள் உருவாக லாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பிளாஸ்டிக் டப்பா ஒன்றில் மைதா மாவை எடுத்து கொண்ட விஞ்ஞானிகள், அதனை முன்னும், பின்னுமாக தொடர்ந்து தள்ளியுள்ளனர். அப்போது மாவில் பிளவு ஏற்பட்டு 200 வோல்ட் மின்சார சக்தி உருவாகி யுள்ளது. முதலில் தாங்கள் முட்டாள்தனமாக ஏதோ செய்வதாகவே எண்ணியதாக ரட்கர்ஸ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான ட்ரார் ஷின்பிராட் கூறினார். இந்த விஷயத்தை விளக்கக் கூடிய ஒரு நுட்பம் இருப்பதாக தனக்குத் தெரியவில்லை என்றும், இது ஒரு புதிய வகையான பவுதிகமாக தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவர்கள் கண்டதை டென்வரில் நடை பெற்ற அமெரிக்கன் பிசிக்கல் சொசைட்டி கூட்டத்தில் அறிவித்துள்ளனர். மைதா மாவு மட்டுமின்றி, வேறு தானிய மாவுகளோடு செய்யப்பட்ட ஆராய்ச்சியிலும் இதே போன்று மின்சார சக்தி உருவாகியுள்ளது. இதே விஷயம் மண் படிமங்களில் ஏற்படும் போது லட்சக் கணக்கான வோல்ட் திறன் கொண்ட மின்சக்தி உருவாகும். இதுவே வானில் வெளிச்சமாக உருவாகி, நிலநடுக்கம் வர போவதற்கான அறிகுறியாக காண்பிக்கிறது என கூறலாம் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு வானில் வெளிச்சம் ஏற்படுகிறது என 300 ஆண்டு களாகவே சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், இதெல்லாம் கட்டுக்கதை என்றே விஞ்ஞானி கள் சொல்லி வந்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக யூடியூப் போன்ற இணையத் தளங்கள் தெளிவாக படம் பிடிக்கப்பட்டு அவற்றை உலகத்தில் இருக்கும் விஞ்ஞானி கள் பார்ப்பதற்கான வசதிகள் ஏற்பட்டு விட்டன.
புகுஷிமா மற்றும் லாகிலாவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு வானில் ஏற்பட்ட வெளிச் சங்கள் தெளிவாக படம் பிடிக்கப்பட்டு இணையத் தில் ஏற்றப்பட்டன. அதே சமயம், எல்லா வெளிச்சத் திற்கு பின்பாகவும் நில நடுக்கம் வருவதில்லை. அதுவும் ஒரு சில சமயங்களில் தான் நில நடுக்கம் ஏற்படுகிறது. இதனை ஆராய்வதற்காக நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ள பகுதிகளில் ஏற்படும் மின் சக்தியை அளவிடுவதற்காக கோபுரங்களை துருக்கி விஞ்ஞானிகள் நிறுவியுள்ளனர். இதில் ரிக்டர் அளவு கோளில் 5 க்கு மேல் பதிவாகும் நில நடுக்கங்கள் ஏற்படுவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கைகள் இருப்பதை அவர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் எல்லா நேரமும் ஒரே அளவு மின்சக்தி உருவாகவில்லை, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையான மின்சக்தி உருவாகிறது. இது எதனால் ஏற்படு கிறது என்பதை ஆராய அதிக ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன என்றும், அதில் முதல்படி தான் இது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
எ?ˆ”?÷வ் அ?¶ட?, அங்குரடிசு.
