PUBLISHED ON : ஏப் 25, 2014

அ நிறம் | அளவு
இயற்கை உணவு!
ரஷ்யாவில் லெனின் கிரேடு நகரத்தைச் சேர்ந்த அபனாசியா அப்ரா மோவனா என்ற பெண் 107 வருடம் வாழ்ந்தார். இந்தப் பெண் தனது ஆயுள் முழுவதுமே பழங்கள், காய்கறிகள் பால் மற்றும் உருளைக்கிழங்கி லிருந்து தயாரிக்கப்பட்ட 'கிவ்வெல்' என்ற பானம் ஆகியவற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தார். பல் நோய்க்காக முதன் முதலில் டாக்டரை நாடியது அவரது 99 வது வயதில்தான் என்றால் பார்த்துக்கோங்களேன்.
மூக்கு நீளம்!
ஒரு பெரிய புள்ளி விவரக்கணக் கெடுப்பு நடத்தியது அமெரிக்க அரசு. அங்குள்ள விமானப் பணிப் பெண்களின் மூக்கு சராசரி 60 மில்லி மீட்டர் நீளம் உடையது எனக் கணக் கெடுத்தது. இதற்கு மட்டும் அந்த குபேர நாடு செலவழித்த தொகை ஐம்பது லட்ச ரூபாய்
அம்மாடியோவ்.
