தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : மே 30, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 30, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

பணம் சம்பாதிப்பது எளிது!

உலகினில் பெரும்பாலானோரின் மனதில் இருக்கும் முக்கியமான கேள்விகளில் ஒன்று 'பணம் சம்பாதிப்பது எப்படி?'

அதை எளிது என ஒருவர் சொல்கிறார். ஆனால், கடினம் என்றும் ஒரு விஷயத்தை சொல்கிறார்.

இதோ அவரை அறிமுகப் படுத்துகிறேன்.

ஒரு நிமிடத்தில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதை உலகிற்குமுதன் முதலில் சொன்னவர் பில்கேட்ஸ்.

'மனிதனுக்கு ஆக்ஸிஜன் எவ்வளவு முக்கியமோ, அப்படி கம்ப்யூட்டருக்கு விண்டோஸ் முக்கியம். விண்டோஸ் இல்லாத கம்ப்யூட்டர் உயிரற்ற உடலுக்கு சமம்' என்று சொன்னவர் இவர்.

'டிவி' ரிமோட்டைக் கூட கையில் எடுக்க பயந்தவர்களுக்கு கம்ப்யூட்டரில் புகுந்து விளையாடும் அளவுக்கு அதை சுலபமாக்கியது பில்கேட்ஸின் பிஸினஸ் மூளைதான். கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் அதற்கான காப்புரிமை ஆகியவை நீர்க்குமிழி போல் சொற்ப ஆயுள் கொண்டவை.

மனசு யோசிக்கும் வேகத்தில் வியாபாரத்தை வேகமாக செய்தாக வேண்டும் என்று அடிக்கடி சொல்வார். போட்டியாளர்களே மிரண்டு போகும் அளவுக்கு அவர்களது கம்பெனியை ஒன்றுக்கு நூறாக விலை கொடுத்து வாங்கி விடுவார்.

இப்படித்தான் 'இண்டர்நெட் எக்ஸ் ப்ளோரர்', 'ஹாட்மெயில்' போன்றவற்றை தனது நிறுவனமாக ஆக்கி கொண்டார்.

என்னதான் பணம் மேல் பணம் பண்ணி கொண்டிருந்தாலும், பில்கேட்ஸின் தேடல் மாறியது. தற்போது அவரது கவனம் திசை மாறியது. நோய் நொடியிலிருந்து மனித இனத்தை காப்பாற்ற தன்னால் என்ன செய்ய முடியுமோ அதை பில்கேட்ஸ் செய்ய தொடங்கினார்.

அதற்காக ஒரு லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளார்.

இந்தியாவில் எய்ட்ஸை ஒழிக்க, ரூ.800 கோடி, உலகின் உணவு பஞ்சத்தை சமாளிக்க ரூ.1200 கோடி என்று பட்டியல் நீள்கிறது.

'பணம் சம்பாதிப்பது எளிது. ஆனால், அதை நல்ல காரியங்களுக்கு செலவிட தேவைப்படும் பொறுப்பு இருக்கிறதே, அது மிக கடினம்' என்கிறார் பில்கேட்ஸ்.

நண்பர்களே, நம்மிடம் 2 பேனா இருக் கிறது. பக்கத்தில் இருக்கும் நம் நண்பனின் பேனா எழுதவில்லை. என்ன செய்வோம்? நம் 2 பேனாக்களில் ஒன்றை தருவோம் அல்லவா! அது போலத்தான், ஆண்டவன் ஒவ்வொருவரிடம் ஒவ்வொன்றை வைத்திருப்பார். அதாவது கல்வி, பணம், ஒழுக்கம், சேவை மனப்பான்மை, அன்பு, திறமை, புத்திசாலித்தனம் இப்படி சொல்லி கொண்டே போகலாம். அவையெல்லாம் ஒருவர் தன்னை தானே உயர்த்தி கொள்ள பெருமைப்படுத்தி கொள்ள மட்டுமே கொடுக்கப்படவில்லை.

நம் அருகே உள்ள அனைவருக்குமானது அது. மல்லிகை செடியின் வாசம் நம் வீட்டை தாண்டி பக்கத்து வீட்டையும் அடைந்து ஆனந்தப்படுத்தும்.

நமக்கு ஆறு அறிவு தரப்பட்டுள்ளது. அதன் முக்கிய மாண்பே கூட்டு வாழ்க்கை. வீடு, வீதி, கிராமம், நகரம், மாநிலம், நாடு, கண்டம் என விரிந்து கிடக்கும் உலகத்தை ஒரே குடும்பமாக பாவித்து வாழ்வதே ஆறாம் அறிவின் அறிகுறி.

நிறைய கற்போம். திறமை, புத்திசாலித் தனம், பணம் சம்பாதிப்போம். நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள இருக்கப்பட்டுள்ள எதையும் அள்ளி அள்ளி கொடுப்போம்.

இவை கொடுப்பதனால் குறையவே குறையாது. நாம் சாப்பிடும் ஸ்நாக்ஸிலிருந்து ஒவ்வொன்றையும் மற்றவர்களுடன் பகிர்வோம்.

ஒவ்வொருவரும் தம் நிலையை உயர்த்த பாடுபடுவோம். நாம் உயர நாடு உயரும்.

என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us