தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஜூன் 13, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 13, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

'மை' பெருமை!

19-ம் நூற்றாண்டில் மனித இனத்தின் தலைசிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று கணிப்பொறி. அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த கணிப்பொறிக்கு நிகரான கண்டுபிடிப்பு என்று வேறு ஏதாவது இருக்குமென்றால் அது எழுதுவதற்காக பயன்படுத்தும் 'மை'தான். சுமார் 4,600 ஆண்டுகளுக்கு (கி.மு.2,600) முன்பு சீனர்களால் 'மை' கண்டறியப்பட்டது.

மனிதனது நினை வாற்றலின் எல்லையை தாண்டி சில விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்ட போது தோன்றியது தான் எழுத்துக்கள். ஆரம்பத்தில் மனிதன் எழுத்துக்களை செதுக்கியது கற்களின் மீதுதான்.

பின் மரங்களிலும், விலங்குகளின் எலும்பு களிலும் கூர்மையான கம்பி கொண்டு எழுத்துக்கள் துளையிட்டு செதுக்கப்பட்டன. இதன் பரிணாம வளர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்டதுதான் 'இங்க்' என்று அழைக்கப்படும் 'மை'.

சீன தத்துவ வாதியான டியன் சியு என்பவர் கி.மு.2697-ம் ஆண்டில் கார்பன் நிறமி, புகைக்கரி, ஊண் பசை (விலங்குகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்டது) ஆகியவற்றுடன் விளக்கு எண்ணெயை சேர்த்து உரலில் அரைத்து அடர் கருப்பு நிற திரவத்தை தயாரித்தார். இதுதான் உலகில் முதன் முதலில் எழுதுவதற்காக தயாரிக்கப் பட்ட மை ஆகும். இந்த 'மை'க்கு பெயர் 'இந்தியன் இங்க்.'

சீன மனிதரால் கண்டறியப் பட்ட 'மை'க்கு இந்தியா 'இங்க்' என்று பெயரிட்டதற்கு காரணம் உண்டு.

அப்போது 'மை' தயாரிக்க தேவைப்பட்ட மூலப்பொருளான கார்பன் நிறமி இந்தியாவில் இருந்து தான் சீனாவில் இறக்குமதி செய்யப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில்தான் டியன், தான் தயாரித்த 'மை'க்கு 'இந்தியா இங்க்' என்று பெயரிட்டார்.

அதன்பிறகு தாவரங்களில் இருந்து பெறப்பட்ட தாவர நிறமிகள், நிலத்தில் கிடைக்கும் தாதுக்களை கொண்டு வெவ்வேறு வண்ணங்களில் 'இங்க்' தயாரிக்கும் தொழில் நுட்பம் கண்டறியப்பட்டது.

கி.பி.மூன்றாம் நூற்றாண்டுகளில் கெட்டி யான அதாவது திடமான 'இங்க்' தயாரிப்பதில் சீனர்கள் வெற்றி பெற்றிருந்தனர். இந்த 'இங்க்' குச்சிகளில் அடைக்கப்பட்டு எழுத நினைக்கும் போது தண்ணீரில் நனைத்து பின் எழுதப்பட்டது.

சாங் வம்சத்தினர் ஆட்சிக்காலத்தில் சீனாவில் புகழ் பெற்று விளங்கிய பல்துறை வல்லுனரான சென்கவ் (கி.பி.1031-1095) பெட்ரோலை எரிப்பதன் மூலம் கிடைக்கும் புகைக் கரியை கொண்டு கார்பன் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை கண்டறிந்தார். இரும்பு உப்புகள் (பெர்ரஸ் சல்பேட்) பசை, தண்ணீர், வால்நட் ஆயில் மற்றும் புகைக்கரி ஆகியவற்றை கொண்டு அச்சகங்களுக்கு தேவைப்படும் 'மை'யை ஜெர்மனியை சேர்ந்த வல்லுநர் ஜோகன்னஸ் குட்டன் பர்க் என்பவர் பதினைந்தாம் நூற்றாண்டு வாக்கில் தயாரித்து உலகின் முதல் அச்சகத்தையும் நிறுவினார். அதைத் தொடர்ந்து கரைப்பான்கள், பிசின்கள், உராய்வு நீக்கிகள், நிறமிகள் மற்றும் சாயங்கள் கொண்டு இன்றைய நவீன, 'இங்க்' தயாரிக்கப்பட்டது.

சீனாவில் துவங்கி ஜப்பானில் பிரபலமாகி, ஐரோப்பிய நாடு களை எட்டி பின் உலகம் முழுவதும் பரவி உலகில் அழியாத இடத்தை 'மை' பிடித்துள்ளது என்றால் மிகை இல்லை.

என்றென்றும் உங்கள் அன்பு,

அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us