தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : செப் 19, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 19, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

தங்கம் எங்கு தங்கும்!

ஆடையில்: பட்டுப் புடவைகளுக்கு அழகு சேர்ப்பது, அதில் சேர்க்கப்பட்டிருக்கும் ஜரிகை. இதை மெல்லிய தங்கம் அல்லது வெள்ளி இழையில் தயாரிக்கின்றனர். பட்டு மற்றும் மென்மையான இழைகளால் உருவான ஆடைகளில் ஜரிகை நெய்யப்படுகிறது. அதுவே, அந்த ஆடைக்கு அழகிய வடிவமைப்பை வழங்குகிறது.

பட்டு இழையின் மீதான மெல்லிய கம்பி மீது வெள்ளி மற்றும் செம்பு கலவை பூசப்பட்டு அதன் மீது பொன்முலாம் பூசுவதன் மூலம் தூய்மையான ஜரிகை தயார் செய்யப்படுகிறது. இந்த ஜரிகை 0.5 சதவீத தங்கம், 40 முதல் 55 சதவீத வெள்ளி, 20 முதல் 22 சதவீத பட்டு மற்றும் எஞ்சிய அளவு செம்பின் கலவையாக இருக்கும்.

தூய்மையான ஜரிகை காஞ்சிபுரம் பட்டுப் புடவை, ஆரணி பட்டு மற்றும் ஒரு சிலவகை பனாரஸ் புடவைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் அளவை பொறுத்து ஜரிகையின் பண மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது. 240 கிராம் தரமான ஜரிகையின் விலை 4 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும்.

அழகில்: கோல்டு பேஷியல், கோல்டு மேனிகியூர் - பெடிகியூர் மற்றும் கோல்டு மேக் அப் போன்றவை இப்போது பிரபலம். அதனால் பெண்கள் அழகில் தங்கம் நிறையவே கலக்கிறது. கோல்டு பேஷியலை எடுத்துக் கொண்டால் அது அழகாக மட்டுமல்ல, ஆயுர்வேத சிகிச்சை போன்றும் கருதப்படுகிறது.

துகள்களாக மாற்றப்பட்டு அழகுக்கலையில் பயன்படுத்தப்படும் தங்கம் சருமத்திற்கு பள பளப்பை வழங்குகிறது. முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் வயதாகும் தன்மையை தடுக்க கோல்டு பேஷியல் பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்தில் ஊடுருவி புத்துணர்ச்சி அளிக்கிறது. ஒரு மணி நேரம் வரை செய்யப்படும் இந்த பேஷியலில் 22 கேரட் தங்கத்தில் தயாரிக்கப்பட்ட ஜெல் மற்றும் கிரீம் சருமத்தில் செலுத்தப்படுகிறது.

பரிசில்: சிலவகை உலோகங்களை பாது காப்பதற்கும், அதன் அழகை மேம்படுத்தவும் தங்கத்தை பயன்படுத்துகின்றனர். அவைகளின் நவீன எலக்ட்ரோலைடிக் முறையில் தங்கம் பூசப்படுகிறது. பங்களா மற்றும் அலுவலகங் களை அலங்கரிக்க உள்ளறை அலங்காரம் செய்வது இப்போது அதிகரித்து வருகிறது. அந்த பொருட்களிலும் இப்போது தங்க முலாம் பூசுகின்றனர். இந்த பொருட்கள் பரிசளிக்க ஏற்றவையாக இருக்கின்றன. விலை சற்று அதிகம் என்றாலும் அத்தகைய பொருட் களுக்கு ஐந்தாண்டு வரை உத்தரவாதம் அளிக் கின்றனர். தங்க முலாம் பூசப்பட்ட பல்வேறு பேனாக்களும் விற்பனையாகின்றன.

உண¬வில்: உலகம் முழுவதும், உயர்ந்த வகை உணவுகளிலும் தங்கம் சேர்க்கப்படுகிறது. கேக் வகைகளில் தங்கத்துகள்கள் கலக்கப்படுகின்றன.

மருத்துவத்தில்: பற்குழிகளை அடைக்க தங்க இலை பயன்படு கிறது. நவீன பல் சிகிச்சையில் வெள்ளைத் தங்கம் அல்லது தங்க கலவை இணைப்பாக - அடைப்பாக, மூடியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தங்கம் பின்விளைவுகளை தராது என்பதால் விலை உயர்வாக இருந்தாலும், அதிகமாக பயன் படுத்தப்படுகிறது.

அறுவை சிகிச்சை சாதனம், உயிர் காக்கும் சாதனம் மற்றும் பேஸ்மேக்கர் ஆகியவற்றிலும் தங்கத்தின் பயன்பாடு உள்ளது. சிறிய மின்னணு சாதனங் களிலும் தங்கம் பயன்படுத்தப் படுகிறது. ஜி.பி.எஸ்.சில் தொடங்கி கால்குலேட்டர், அலாரம், கடிகாரம், டேப்லேட் போன்றவைகளில் தங்கம் கலந்து இருக்கிறது. மைக்ரோ வேவ் அவன், சலவை இயந்திரம் மற்றும் 'டிவி'களில் கூட சிறிதளவு தங்கம் இருக்கத் தான் செய்கிறது.

நோ இங்கிலிஷ் நாடு!

நம் நாட்டில் ஆங்கிலம் தெரியாதவர்கள் உயிர் வாழவே முடியாது என்பது போல் இங்கு ஆங்கிலம் போதிக்கப்படுகிறது. ஆனால், ஜப்பானில் அனைத்திலுமே ஜப்பானிய மொழியில் தான்.

ஆங்கிலம் இல்லாத நாடுகளில் 'நோ தேங்க்ஸ்', 'எஸ்' என்ற வார்த்தைகளை எப்போதாவது பயன்படுத்துவர். ஆனால், ஜப்பானில் அதுவும் இல்லை. அந்த நாட்டில் ஆங்கில வார்த்தைகளை கேட்கவே முடியாது. ஜப்பானில் அவர்களின் தாய் மொழி மட்டுமே தொடர்பு கொள்வதற்கான ஒரே வழி. இங்கு பேச்சு மட்டுமல்ல, ஹைக்கூ முதல் ஆராய்ச்சி வரை அத்தனைக்கும் தாய்மொழியான ஜப்பானிய மொழியைத்தான் பயன்படுத்து கின்றனர். இது எப்படி சாத்தியம்?

மருத்துவம், தொழில் நுட்பம் சம்பந்தப்பட்ட ஆங்கில ஆராய்ச்சி நூல்கள், உலக அளவில் இருந்து வெளிவரும் வார, மாத ஆராய்ச்சி இதழ்கள் அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் ஜப்பானிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு ஆங்கிலம் தெரியாமல் எப்படி தகவல் தொழில்நுட்பத்துறையில் ஜெயிக்க முடியும் என்றொரு கேள்வி எழுகிறது.

யாருக்கு ஆங்கிலம் அவசிய மாக தேவைப்படுகிறதோ அவர் கள் மட்டும் அதை கற்றுக் கொள்ள லாம். சிலருக்கு ஆங்கிலம் தேவை என்பதற்காக எல்லாருக்கும் ஆங்கிலக் கல்வியை கட்டாயம் ஆக்கும் பழக்கம் அங்கு இல்லை. நாடு முழுவதும் ஒரேயொரு ஆங்கில நாளிதழைத் தவிர, மற்ற அனைத்தும் ஜப்பான் மொழியில் இருந்துதான் வெளிவருகிறது. தாய் மொழியிலேயே அனைத்தும் கிடைக்கும் போது கடைக்கோடி குடிமகனும் தனது முழுத் திறமையை எளிதாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறான். ஜப்பானில் கோவில்களை அரிதாகத்தான் பார்க்க முடியும்.

'நாங்கள் வருடத்திற்கு ஒரு முறை, புது வருடம் பிறக்கும்போதுதான் கோவிலுக்கு செல்வோம். மற்றபடி கோவிலுக்கு சென்று பணத்தையும், நேரத்தையும் செலவழிப்பது கிடையாது. கடவுள் நம்பிக்கையை விட எங்களுக்குத் தன்னம்பிக்கை அதிகம்' என்கின்றனர் ஜப்பானியர்கள்.

என்றென்றும் அன்புடன், அங்குராசு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us