தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஜன 02, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 02, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

உடலின் டைம்-டேபிள்!

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு. இதை நாம் முறையாகப் பின்பற்றினால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.

இதோ காலஅட்டவணை:-

விடியற்காலை 3 முதல் 5 மணி வரை நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.

காலை 5 முதல் 7 மணி வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக் கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச் சிக்கலே ஏற்படாது. காலை 7 முதல் 9 மணி வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.

காலை 9 முதல் 11 மணி வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது. காலை 11 முதல் 1 மணி வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

பிற்பகல் 1 முதல் 3 மணி வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.

பிற்பகல் 3 முதல் 5 மணி வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம். மாலை 5 முதல் 7 மணி வரை தியானம், இறை வழிபாடு செய்வதற்கு ஏற்றது. இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.

இரவு 9 முதல் 11 மணி வரை உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்க லாம். இரவு 11 முதல் 1 மணிவரை பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.

இரவு 1 முதல் 3 மணி வரை கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும். கொர்... கொர்....

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!

இது, 'பீட்ரூட் பிரியாணி' செய்முறை நேரம்.

தேவையானவை: பாசுமதி அரிசி - 1 கப், பீட்ரூட் - 2, வெங்காயம், தக்காளி - தலா 1, இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, சோம்பு - அரை டீஸ்பூன், பிரியாணி இலை - 1, பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன், மிளகாய்த் தூள், தனியாத் தூள் - தலா 1 டீஸ்பூன், பச்சை மிளகாய்-1, புதினா, கொத்தமல்லித் தழை - தலா 1கைப்பிடி, தயிர்-2 டேபிள் ஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி-10, எண்ணெய், வெண்ணெய் - தலா 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.

செய்முறை: அரிசியைக் களைந்து ஊற வைக்கவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியுடன் புதினா, கொத்தமல்லித் தழை சேர்த்து அரைக்கவும். பீட்ரூட்டைத் துருவிக் கொள்ளவும். வாயகன்ற அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய், வெண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு சேர்த்து தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கவும்.

பீட்ரூட் துருவல் சேர்த்து வதக்கி, மசாலாத் தூள், மிளகாய்த் தூள், தனியாத்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு, தயிர் சேர்த்துக் கிளறி, 11/2 கப் தண்ணீர் சேர்க்கவும். கொதித்தும், அரிசியைச் சேர்த்துக் கிளறி, மூடவும். சிறு தீயில் வேகவிடவும். முக்கால் பதம் வெந்ததும் 'தம்' மில் வைக்கவும். சுவையான பீட்ரூட் பிரியாணி தயார். காரத்துக்கு ஏற்ப மிளகாயின் அளவைக் கூட்டலாம். தயிருக்குப் பதில் கால் கப் மோர் அல்லது 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். விரும்பினால் பச்சை பட்டாணி சேர்க்கலாம். தக்காளி, புதினா, கொத்தமல்லித் தழையை அரைக்காமல் பொடியாக நறுக்கிச் சேர்த்தும் செய்யலாம்.

என்றென்றும் அன்புடன், அங்குராசு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us