தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : மார் 03, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 03, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு!

* பல நேரங்களில், நம் கண்ணில் படாத, ஆனால், நம்மை சிறுக சிறுக சித்திரவதை செய்யும் சிறு உயிரினம் தான் கொசு. டெங்கு, மலேரியா போன்ற பயங்கரங்களின் குட்டி தூதுவர்களை பற்றிய சில கொசு(று) தகவல்கள்...

* கொசுக்களை நாம் பூமியில் இருந்து, பூண்டோடு ஒழித்துவிட துடித்தாலும், கொசுக்களுக்கும் பூமியில் வாழும் உரிமை இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆம்! அவை சுமார், 10 கோடி ஆண்டுகளாக பூமியில் இருக்கின்றன. கொசுக்கள், 40 கோடி ஆண்டுகளாக பூமியில் ரீங்கரிப்பதாக சொல்லும் ஆய்வாளர்களும் இருக்கின்றனர். கடந்த, 2014ல், கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கற்படிவத்தில் காணப்பட்ட கொசு, 4.6 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது

* கொசுக்கள் பற்றிய மற்றொரு வியப்பூட்டும் தகவல். இதில், 3,500 இனங்கள் இருக்கின்றன. ஆறுதலான தகவல், சில, 100 கொசு இனங்களே மனிதர்களை கடிப்பவை; நோய்களை பரப்புபவை

* ரத்தத்தை உறிஞ்சுவதில் ருசிகண்ட கொசுக்கள், ஆரம்பத்தில், முடி அடர்ந்த விலங்குகளை தான், தங்களுக்கு விருந்து அளிப்பவைகளாக வைத்திருந்தன. காலப்போக்கில் தான் மனிதர்களுக்கு மாறியிருக்கின்றன

* மெசபடோமியாவிலும், மொகஞ்சதாரோவிலும் மலேரியா கொசுக்களால் பாதிக்கப்பட்டு, மனிதர்கள் மடிந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

* 'அனாபலீஸ்' கொசுக்கள், ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும், 20 கோடி பேருக்கு, மலேரியா தொற்றை ஏற்படுத்துகின்றன; நான்கு லட்சம் பேரின் உயிரை பறிக்கின்றன. 'ரீங்காரம்' ஏற்படுத்தும் இந்த கொசுக்கள், இரவு தான் படையெடுக்க துவங்கும்

* டெங்கு, மஞ்சள் காமாலை, ஸிகா, சிக்கன்குனியா போன்ற கொடும் பரிசுகளை வழங்கும், 'ஏடிஸ்' கொசுக்கள், 'அமைதிப்படை!'- இவை, பகல் நேரத்திலேயே, கீழிருந்து அல்லது பின்புறத்தில் இருந்து, சத்தமின்றி, தீவிரமாக தாக்கும்

* கொசுக்கள், வெப்பத்தை நுட்பமாக உணரக்கூடியவை. இதற்கு, அதன் வாயை சுற்றி அமைந்திருக்கும் வெப்ப உணர்விகள் உதவுகின்றன. கொசுக்கள் தங்களின் வெப்ப உணர்திறன் மூலம், ரத்த ஓட்டம் மிகுந்த நாளங்களைக் கூட கண்டுபிடித்து விடுகின்றன

* நாம் வெளியிடும், கார்பன்- டை ஆக்ஸைடு வாயுவும், கொசுக்களுக்கு நம்மை காட்டி கொடுக்கிறது. 'கார்பன்- டை- ஆக்ஸைடு' வெளியீட்டின் மூலம், 50 மீட்டர்களுக்கு அப்பால் இருந்தே, மனிதர்களின் இருப்பிடத்தை கண்டுபிடித்து விடுகின்றன இந்த கொசுக்கள்

* மனித உடலில் இருந்து வெளிப்படும், 'ஆக்டேனால்' என்ற வேதிப்பொருளும் கொசுக்களை வசீகரிக்கிறது. மனித வியர்வையால் வெளிப்படும் இவ்வேதிப்பொருளில், ஸ்டீராய்டுகள், கொலஸ்ட்ரால் போன்றவை நிறைந்திருக்கின்றன

* கொசுக்கடியை தவிர்க்க வேண்டும் என்றால், இரவில் அடர்வண்ண ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். அடர்வண்ண ஆடைகள் அதிக வெப்பத்தை தக்க வைக்கும் என்பதால், கொசுக்களால் எளிதில் நம்மை மோப்பம் பிடிக்க முடியும்

* ஒரு பெண் கொசுவால், அதன் எடையை போல, மூன்று மடங்கு ரத்தத்தை உறிஞ்ச முடியும். இந்த கணக்கின்படி பார்த்தால், ஒரு கொசு, 10.2 லட்சம் முறை கடித்தால், ஒரு மனிதனின் உடலில் உள்ள ரத்தம் முழுவதையும் உறிஞ்சிவிடலாம்

* சிலருக்கு, கால்களில் எப்போதும் கசகசவென்று வியர்க்கும். அந்த வியர்வை நாற்றத்தை, சில கொசுக்கள் விரும்பி வந்து கடிக்கின்றன

* நிலவொளி நேரம் கவிஞர்களுக்கு மட்டுமல்ல; கொசுக்களுக்கும் மிகவும் பிடித்த நேரம். நிலவொளி வேளையில், கொசுக்களின் தாக்குதல், 500 சதவீதம் அளவு அதிகரிக்கிறது என்கிறது ஒரு ஆய்வு

* அதிகமாக கொசுக்கடி படுவதில் ஒரு நன்மையும் இருக்கிறது. அதிகமாக கொசு கடிக்க கடிக்க, நம் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ந்து, கொசுக்களால் பரவும் நோய்களால் நாம் பாதிக்கப்படும் அபாயம் குறையும்

* நாம் வெளியிடும் வெப்பத்துடன், நம் நிறமும் கொசுக்களின் வேட்டைக்கு உதவுகிறது. கறுப்பு நிறம் கொண்டவர்களை கொசுக்கள் அதிகம் கடிக்கும்

இன்னா நைனா, மெய்யாலுமேவா!

சமீபத்தில், தாய்லாந்து மன்னரின் நாயை கிண்டல் செய்ததாக, தேசத் துரோக வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 37 ஆண்டுகள் ஒருவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்று வித்தியாசமான பல சட்டங்கள், சில நாடுகளில், நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில...

* கனடாவில், சட்ட விரோத செயல்கள் சம்பந்தமான காட்சி கள், வசனங்கள், இடம்பெறும் காமிக்ஸ் புத்தகங்கள் தடைசெய்யப்படும்

* ஸ்விட்சர்லாந்து நாட்டில், இரவு 10:00 மணிக்கு மேல், கழிவறைக்கு செல்ல தடை. அச்சச்சோ... அப்போ வந்துட்டா?

* பிரான்ஸ் நாட்டில் பன்றிக்கு, 'நெப்போலியன் ' என பெயர் சூட்டினால் குற்றம். ஓ.கே.,

* அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில், விவாகரத்து பெற்ற பெண்கள் மற்றும் விதவைகள் ஞாயிற்றுக்கிழமை மதியம், 'ஸ்கை டைவிங்'கில் ஈடுபடுவது மிகப் பெரிய குற்றம். இது என்னடா புதுப்புரளியா இருக்கு?

* ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், எலெக்ட்ரிஷியன் அல்லாதவர்கள், குண்டு பல்பை மாற்றினால் கூட குற்றம் தான். மத்தவங்களுக்கெல்லாம் பல்பு!

* ஹவாய் நாட்டில், சூரியன் மறைந்ததுக்கு பின், சத்தமாக பாடினால் வாயிலேயே குத்தி உள்ளே தள்ளி விடுவர். பாத்ரூம்ல பாடினால்!

* சாமோ தீவில், மனைவியின் பிறந்த நாளை கணவர் மறப்பது சட்டப்படி குற்றம். இது சூப்பரு!

* அமெரிக்காவின், யோவா மாநிலத்தில் உள்ள, ஒட்டும்வா நகரத்தில், பெண்களை பார்த்து, ஆண்கள் கண் அடிப்பது சட்டப்படி தவறு. தூசி விழுந்தா கூட வீட்டுக்கு வந்து தான் கண்ணை சிமிட்டணும்

* அமெரிக்காவின் ஆர்கன்ஸாஸ் மாநிலத்தில், கணவன், மனைவியை அடிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. ஆனால், மாதம் ஒருமுறை மட்டும் தான் அடிக்க வாய்ப்பு வழங்கப்படும். அப்ப மனைவிக்கு...

* பிலிப்பைன்ஸிலும், வாட்டிகனிலும் தம்பதியர் பிரிந்து வாழ்வதே குற்றம். விவாகரத்து என்ற ஒன்று, இந்த இரு நாடுகளிலும் கிடையவே கிடையாது. என்ன கொடுமைசார் இது?

* உள்ளாடை அணியாமல், வீட்டுக் கதவை தாண்டினாலே, தாய்லாந்தில் சட்டப்படி குற்றமாக கருதப்படும். வீட்டுக்குள்ள போட வேணாமா?

* சிங்கப்பூரில், 'பபிள் கம்' விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. வாவ்!

* இஸ்ரேலில், சைக்கிள் ஓட்டுவதற்கும், லைசென்ஸ் வேண்டும். எட்டு போட்டு காட்டணுமா

என்றென்றும் அன்புடன்,

அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us