PUBLISHED ON : மார் 03, 2017

நம் பூமியில், ஆறாவது மிகப் பெரிய அழிவு தாவரங் களுக்கும், மிருகங்களுக்கும் நடைபெற உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வேட்டையாடி கொல்லப்படுபவை, சுற்றுச் சூழல் பாதிப்பு மற்றும் மாற்றங்களினால் அவற்றிற்கு பெரும் சீர்கேடு நிகழ்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இனி வரும் காலங்களில் இவை காணாமல் போகும் நிலை அதிகம் எனக் கூறப்படுபவை பற்றி பார்ப்போமா?
தென் சீன புலி!
இப்போது இதை அனேகமாக இல்லை என்றே கூறி விடலாம்! கடந்த, 25 வருடங்களாக காட்டுப் பகுதியில் காணப்படவேயில்லை.
கல்ப்போர்பாய்ஸ்... ராட்சச மீன்!
நீரில் வாழ்வனவற்றில் அபூர்வமான சிலவற்றில் இதுவும் ஒன்று. 2014 கணக்கெடுப்பின்படி இவற்றின் மொத்த எண்ணிக்கையே, 100 தான்.
சைனீஸ் எறும்பு திண்ணி!
சாப்பாட்டிற்காகவும், மருந்துவத்திற்காகவும் இவை சீனர்களால் கொல்லப்படுகின்றன. 1960ல் இருந்த எண்ணிக்கையில், 94 சதவிகிதம் இன்று குறைந்து விட்டன.
பிக்மி மூன்று -பாத விரல்களைக் கொண்ட கரடி!
ஆய்வாளர்கள் கணக்கெடுப்பின்படி, 2012ல் மொத்தமே, 80 தான் உள்ளதாக கணக்கிட்டுள்ளனர். மரம் வெட்டுபவர்களால், மரத்துடன் இதுவும் வெட்டிக் கொல்லப்படுகிறது.
நார்தர்ன் வழுக்கை இபிஸ் என்ற ஒரு விதமான நாரை பறவை!
மொராக்கோ நாட்டில் மட்டும் காணப்படும் இதன் மொத்த எண்ணிக்கையே சில நூறுகள்தான். இந்த நாரை மற்ற சக பறவைகளாலேயே கொல்லப்பட்டு குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
ஹாக்ஸ்பில் ஆமை!
இதன் ஓடு, சாம்பல் மற்றும் தங்க நிறம் கொண்டது. இதற்காகவே கொல்லப்பட்டு வரும் ஆமை இது.
- ராஜிராதா.
