தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஏப் 07, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 07, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

தயிர் என்றால் உயிரா... உங்களுக்கு?

தயிர் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற பயத்தால், பலர் அதை தவிர்க்க பார்க்கின்றனர். ஆனால், தயிரில் உள்ள அதிக புரதச்சத்து காரணமாக, உடல் எடை குறையவும் நிறைய வாய்ப்புள்ளது.

தயிர் சாப்பிடும்போது, எவ்வளவு கலோரிகள் வரை நாம் எடுத்து கொள்கிறோம் என்பது தான் முக்கியம்.

சில தயிர் பாக்கெட்டுகளில், 100 கலோரிகளும், 6 கிராம் புரதமும் இருக்கும். அதற்கு பதில் அதிக கலோரிகள் இருந்தாலும், 15 கிராம் வரை புரதம் இருக்கும் தயிரை பயன்படுத்துவது நல்லது.

சில தயிர் சாத பிரியர்கள் அளவுக்கு அதிகமாக தயிர்சாதம் சாப்பிடும் போது, உடல் எடை போடும் வாய்ப்பும் அதிகம். எனவே, அளவோடு தயிர் சாதம் சாப்பிடலாம்.

சிலர் தயிர்சாதம் சாப்பிடும்போது, தேன், தானியம், பருப்பு வகைகள், பழங்கள் போன்ற வேறு உணவுப் பொருட்களையும் சேர்த்து கொள்வர்.

ஆனால், அவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு, தயிருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுங்கள். காலை உணவாக இருந்தால் மட்டும், சத்தான பருப்புகளை சேர்த்து கொள்ளலாம்.

கடையில் வாங்கும் தயிரில், 18 கிராமுக்கு அதிகமாக சர்க்கரையின் அளவு இருந்தாலோ அல்லது சர்க்கரை முதலாவது இடத்தில் இருந்தாலோ, அதை தவிர்த்துவிடுவது நல்லது.

காரணம். அதுதான் கொழுப்பை அதிகமாக்குகிறது. மாறாக, புரதம் அதிகமாக இருக்கும் தயிர் பாக்கெட்டுகளை தயக்கமின்றி பயன்படுத்தலாம்.

கடைகளில் விற்கப்படும் தயிரை வாங்கும் போது, அதில் கொழுப்பு, கலோரி, சர்க்கரை எவ்வளவு உள்ளது என்று பார்த்து வாங்குவது நல்லது. ஆனால், வீட்டில் தயாரிக்கப்படும் தயிர் என்றால் கவலை யில்லை. பொதுவாக, அளவோடு தயிர் உட்கொள்வது நல்லது!

இசையை, ரத்து செய்த மழை!

ஜெர்மனியில் சமீபமாக நிலவிவரும் மோசமான காலநிலையில், ஒரே நேரத்தில், 80 நபர்கள் மீது, மின்னல் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இதனால், முக்கியமான இசை நிகழ்ச்சி ஒன்று அவசரமாக ரத்து செய்யப்பட்டது.

கடந்த, சில நாட்களாக காலநிலை கன்னாபின்னாவென்று இருந்ததால். தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்த மழையில் பலர் பலியாகிவிட்டனர்.

இந்நிலையில், ஜெர்மனியில் புகழ்பெற்ற, 'ராக் ஆம்ரிங்' என்ற இசை நிகழ்ச்சி, பிராங்பர்ட் நகருக்கு அருகே உள்ள, மெண்டிக் விமான நிலையத்தில் நடைபெற்று வந்தது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சியில், 90 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

அப்போது, இடி, மின்னலுடன் மழை அடித்து பெய்ய ஆரம்பிக்க, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், தங்குவதற்கு இடமின்றி தவித்தனர். ஒரு சிலர், நிறுத்தப்பட்ட வாகனங்களில் கீழ் தஞ்சம் அடைந்தனர்.

மழை விடாமல் தொடர்ந்த நிலையில், திரண்டிருந்த கூட்டத்தின் மத்தியில், மின்னல் தாக்கியதில், 80 ரசிகர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களில், 11 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இக்கட்டான நிலையை உணர்ந்த, பிராங்பர்ட் நகர அதிகாரிகள், இசை நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனடியாக ரத்து செய்துவிட்டு, ரசிகர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவிட்டனர்.

சில இசை நிகழ்ச்சிகளில், இசை முழக்கம் இடியாய் இருக்கும். இங்கோ நேரடி, இடி, மின்னலே இறங்கிவிட்டது.

என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us