தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஏப் 13, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 13, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

பிரசித்தி பெற்ற பல்கலை!

உலகின், முதல் பல்கலைக்கழகமாக கருதப்படுவது நாளந்தா. இது, கி.மு., ஐந்தாம் நுாற்றாண்டின் இப்போதைய, பீகார் மாநிலத்தில் துவங்கப்பட்டது என்று கணிக்கப்படுகிறது. அப்போது, இங்கு, ௧௦ ஆயிரம் மாணவர்கள், 2,000 ஆசிரியர்கள் பணியாற்றியதாக, வரலாற்று குறிப்புகள் உள்ளன.

ஆனால், ஆப்கானிஸ்தானில் இருந்து படையெடுத்து வந்த பக்தியார் கில்ஜி என்ற படை தளபதியால் சூறையாடப்பட்டு, முற்றிலும் தீக்கிறையானது. நுாலகத்திலிருந்த பல்வேறு நாட்டின் ஆய்வு நுால்கள் அழிக்கப்பட்டன.

ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களோடு ஒப்பிடும்போது, ௭௦௦ ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கடந்த, 2014ல் மீண்டும் பல்கலைக் கழகம் செயல்படத் துவங்கியது; தற்போது, 130 பேர் இங்கு கல்வி பயில்கின்றனர்.

'பேஸ்புக்' பெருமை அடிக்கும் பெற்றோரே!

புகைப்படங்கள், 'போஸ்ட்' செய்வது, 'லைக்' கொடுப்பது, அரட்டை அடிப்பது இவை தான், உலகம் என்ற மாய வலையில், சிக்குண்டு விட்ட குழந்தைகளை கையாள்வது தான், இன்றைய பெற்றோருக்கு, மிகப் பெரிய சவால்!

ஆபத்துகளும், அயோக்கியர்களும் தாராளமாக மேயும் இடம் தான், 'பேஸ்புக்' என்பதை கூறி, குழந்தைகளை, நல்வழிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நொடியும், அவர்கள் மீதான கண்காணிப்பு மிக அவசியம். மனநோய் வரை தள்ளும் அபாயம், இந்த, 'பேஸ்புக்'கிற்கு உண்டு என்பதற்கு, பலர் உதாரணங்களாக உள்ளனர்.

குழந்தைகள், தனிமையை விரும்ப ஆரம்பித்தாலே, ஆபத்து ஆரம்பம் என்பது தான் உண்மை. எனவே, 'ஆறாம் வகுப்பு படிக்கும் என் மகன் கூட, பேஸ்புக்கில், அக்கவுன்ட் வெச்சிருக்கான்...' என்பது, பெருமை அல்ல; வரப்போகும் ஆபத்துகளுக்கான வரவேற்பு!

சிறுவர்களிடமிருந்து, எதையும் மறைக்க முடியாத, 'நெட்' யுகம். எனவே, சமூக வலைதளங்களில் இருந்து, அவர்களை தள்ளி வைப்பது முடியாத காரியம். எனவே, சுதந்திரமாக செயல்பட விட்டு, அவர்கள் மீது, கண்ணையும், கருத்தையும் வைக்கவேண்டும் பெற்றோர்.

எதை ஏற்றுக் கொள்ள வேண்டும், எதை விலக்க வேண்டும், நட்பு என்பது, எந்த எல்லைக்குள் இருக்க வேண்டும் என்பதை பிரித்தறியும் தெளிவை, அவர்களுக்கு வளர்க்க உதவினால், குழந்தைகள் ஒருபோதும், தவறான வழியில் போக மாட்டார்கள்.

வீட்டிலேயே பதப்படுத்தலாம்!

வீட்டு தோட்டம் அமைப்பது இன்று பெருகி வருகிறது. சில நேரங்களில், அனைத்து காய்கறிகளும், அதிகமான விளைச்சல் கொடுத்தால், அவற்றை எப்படி பாதுகாப்பது என பார்ப்போம்.

பீன்ஸ், வெண்டை, பாகற்காய் போன்ற காய்களை நன்கு கழுவி, நார்களை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக, நறுக்கி ஒரு துணியில், மூட்டை போல் கட்டி, கொதி நீரில், ஆறு முதல், எட்டு நிமிடங்கள் வரை அமுக்கி, குளிர்ந்த நீரில் குளிர விடவும்.

பின், அந்த காய்கறிகளை, வெயிலில் நன்கு உலர்த்தி, காற்று புகாத டின்களில் நிரப்பி வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு, பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்துவதால், நீண்ட நாட்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.வெளியூருக்கும், எளிதாக எடுத்து செல்லலாம்.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us