தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஜூன் 01, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 01, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!

கறிவேப்பிலை பச்சையாய்...

கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டால், மந்திர மாற்றங்கள் ஏற்படும். உணவில் நறுமணத்துக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அசட்டையாக துாக்கி ஏறிந்து விடுவோம். தினமும் காலையில், வெறும் வயிற்றில், அதை பச்சையாக சாப்பிட்டு வந்தால், கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா...

தொடர்ந்து, 120 நாட்கள் கறிவேப்பிலையை, பச்சையாக சாப்பிட்டு வந்தால், பல நன்மைகள் உண்டாகும்.

காலையில், 15 கறிவேப்பிலை இலையை, வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள, அதிகப்படியான கொழுப்பு கரைந்து, அழகான எடுப்பான இடையைப் பெறலாம்.

காலையில், ஒரு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை சேர்த்து உட்கொண்டு வந்தால், ரத்தச் சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும்.

தினமும் காலையில் கறிவேப்பிலையை, பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள, சர்க்கரை அளவு சீராகும்.

உடலில் தேங்கிய கெட்ட கொழுப்பை கரைப்பதோடு, நல்ல கொழுப்பை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்னைகளை தடுக்கும். நீண்ட நாள் செரிமான பிரச்னைகளும் நீங்கி விடும்.

முடி வளர்ச்சியில், நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். முடி, கருமையாக வளர உதவும்.

ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை பொடியை, தேன் கலந்து, தினமும், இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், சளி முறிந்து வெளியேறி விடும்.

கல்லீரலில் தங்கியிருக்கும் நச்சுகள் வெளியேறும். கறிவேப்பிபிலையில் உள்ள வைட்டமின் 'ஏ' மற்றும் 'சி' சத்துக்கள், கல்லீரலை பாதுகாத்து சீராக செயல்பட துாண்டும்.

கறிவேப்பிலையில், வைட்டமின் 'சி' கால்ஷியம், வைட்டமின் 'ஏ' வைட்டமின் 'பி' வைட்டமின் 'பி2' இரும்புச்சத்து, போன்றவை நிறைந்துள்ளன.

நுாற்றாண்டிற்கு முன்பே நுாடுல்ஸ்!

குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் நுாடுல்ஸ் வகைகளை, 100 ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் இயந்திரம் மூலம் தயார் செய்துள்ளனர். சேலத்தைச் சேர்ந்த பழங்கால நாணயங்கள் மற்றும் பழம் பொருட்கள் சேகரிப்பாளரும், வரலாற்று ஆய்வாளருமான சுல்தான், வேலுார் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில், பழமையான நுாடுல்ஸ் இயந்திரத்தை கண்டெடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது:

குழந்தைகள், தற்போது விரும்பி சாப்பிடும், நுாடுல்ஸ், 100 ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் தயாரித்துள்ளனர். வீடுகளிலேயே சேமியா தயாரிக்க, கைப்பிடியுடன் இயக்கும் வகையில், ஒரு கருவியை உருவாக்கியிருந்தனர்.

பண்டிகை, மழை காலங்களில் சத்தான ராகி மற்றும் கோதுமையை அரைத்து, இந்த இயந்திரத்தில் போட்டு, கைகளால் சுற்றி சேமியாவாக தயாரித்து, சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

காலப்போக்கில், கையால் சுற்ற சோம்பல் பட்டு, இயந்திரத்தை பரண் மேல் வைத்து விட்டனர். இது போன்ற இயந்திரங்களை மேம்படுத்த இளைஞர்கள் முன் வர வேண்டும்.

இவ்வாறு, சுல்தான் கூறினார்.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us