தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஆக 10, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 10, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!

உணவை ஒதுக்காதீர்!

உணவை வீணாக்குவது மிகப் பெரிய தவறு; உணவை, உண்ணாமல் ஒதுக்குவதும் தவறு தான்!

இரவு, உணவு உண்ட பின், குறைந்த பட்சம், 10 மணி நேர இடைவெளியில், காலை உணவை உட்கொள்கிறோம். அதனால் தான், இதற்கு, 'பிரேக் பாஸ்ட்' என்று பெயர்.

காலையில், சாப்பிடும் உணவு தான், அந்த நாள் முழுக்க, புத்துணர்ச்சி அடைய வைக்கிறது. மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுறுசுறுப்பாக்குகிறது. காலையில் சாப்பிடா விட்டால், சக்தி போதாமல் உடல் தவித்து விடும்.

காலை உணவை தவிர்த்தால், எரிச்சல் ஏற்படும்; சாதாரண விஷயத்துக்குக் கூட, கோபம் வரும்.

'கஷ்டப்படும் அளவுக்கு வேலை எதுவும் இல்லை; அதனால், காலை உணவு சாப்பிடுவதில்லை...' என சிலர் கூறுவர். ஆனால், பார்க்க, சுவாசிக்க, கேட்க, இதயம் துடிக்க, கிட்னி வேலை செய்ய என, உடலுக்கு சக்தி அவசியம். இரவு சாப்பிட்ட பின், மறுநாள் மதியம் சாப்பிடுகிறீர்கள். இதை உடல் ஓரிரு நாள் பொறுத்துக் கொள்ளும். தொடரும் பட்சத்தில், இதை சமாளிக்க நிறைய, 'பேட் பாக்கெட்'களை, உடல் உருவாக்கி கொள்ளும்.

சாப்பிடும் உணவில் இருந்து கிடைக்கும் எனர்ஜியை, அவற்றில் சேமிக்கும். சாப்பிடாத தருணங்களில், சேமித்த எனர்ஜியை, உடல் பயன்படுத்திக் கொள்ளும்.

சாப்பிடாமல் இருக்கும் போது, உடல், குளுக்கோசுக்காக தவிக்கும். அப்போது, ஹை கலோரி உள்ள உணவுகளை சாப்பிட தோன்றும். மதியம் அளவுக்கதிகமாக சாப்பிடுவீர்கள். காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு, ஒழுங்கான, வாழ்க்கை முறையே இருக்காது.

ஆரோக்கியமே வா... ஆஸ்பிட்டலே போ!

இப்படி சொல்வதற்கு உதவியாக சில குறிப்புகள்...

* சிறுதானியங்களை உணவாக பயன்படுத்த வேண்டும்; அது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது

* தாகம் எடுக்கும் போது, கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும்

* கீரை, பச்சை காய்கறி, பழங்களை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்

* ஆவியில் வேக வைத்த உணவு, நார்ச்சத்து நிறைந்த உணவு ஆகியவை, ரத்த கொதிப்பு வராமல் காப்பாற்றும்

* பனை வெல்லம், பனங்கற்கண்டு சேர்த்து கொண்டால், நீரிழிவு வருவதை தடுக்கலாம்; வெள்ளை சர்க்கரையை தவிர்க்கலாம்

* மிளகாய்க்கு பதில், மிளகு உபயோகித்தால் அல்சர் வருவதை தடுக்கலாம்

* ரீ பைன்ட் எண்ணெயை தவிர்ப்பது, இதயத்திற்கு நல்லது; செக்கு எண்ணெய் சேர்ததுக் கொள்ளலாம்

* உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் செய்தால், நோய்கள் அண்டாது; மருத்துவச் செலவும் இருக்காது.

இட்லி இதமானது!

இட்லி, சாம்பார், சட்னி தான் சிறந்த காலை உணவு. ஆனால், உணவு விஷயத்தில் அமெரிக்கா எதை சொல்கிறதோ அதை தான் செய்கிறோம்.

உணவில் எப்போதும், மாவுச் சத்து, கொழுப்புச் சத்து, புரதச் சத்து இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஸோ இட்லியே பெஸ்ட்!

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us