தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : செப் 14, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 14, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!

தண்ணீர் தரும் ஆரோக்கியம்!

'ஐஸ் வாட்டர்' குடித்தே பழகிய நாம், சுடு தண்ணீருக்கு மாறலாமா...

நோய் வந்தால் மட்டுமே, தண்ணீரை காய்ச்சி பருகுகிறோம். ஆனால், தினமும் தண்ணீரை காய்ச்சி பருகினால், கிடைக்கும் பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா...

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், தினமும் காலையில், சுடு தண்ணீரில், எலுமிச்சை பழச்சாறு கலந்து பருகி வந்தால், விரைவில், நல்ல பலன் கிடைக்கும்.

அளவுக்கு அதிகமான உணவு, எண்ணெய் பலகாரம், இனிப்பு சாப்பிட்டால், சில நேரங்களில் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். அப்போது, ஒரு டம்ளர் சுடு தண்ணீர் பருகினால், சிறிது நேரத்தில், நெஞ்சு எரிச்சல் போய், உணவும் செரிமானம் ஆகும்.

தினமும், காலையில் எழுந்தவுடன், சுடு தண்ணீர் பருகினால், மலச்சிக்கல் தீரும்; இரவு துாங்குவதற்கு முன் பருகினால், புளித்த ஏப்பம், வாயு பிடிப்பு நீங்கும்.

சுக்கு, மிளகு, பனங்கற்கண்டு, சீரகம் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரை குடித்து வந்தால், உடலில் உள்ள பித்தம் குறையும். குறிப்பாக, சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்டால், சுடு தண்ணீரே சிறந்த மருந்து.

சுடு தண்ணீர் பருகுவதால், வியர்வை அதிகமாக வெளியேறும். அத்துடன் சேர்ந்து, உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறி, உடல் சுத்தமாகும். வயதின் காரணமாக ஏற்படும் முதிர்ச்சி தள்ளிப் போடப்படும். முடி உதிர்வை குறைத்து, வளர்ச்சிக்கு உதவும். தலையில் உள்ள பொடுகை கட்டுப்படுத்தும். முக்கியமாக, ரத்த ஓட்டம் சுத்தமாவதால், நரம்பு மண்டலங்களின் செயல்பாடு மேம்படும்.

எனவே, தினமும் சுடுதண்ணீர் பருகுங்கள்; உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us