தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு

அதிமேதாவி அங்குராசு

அதிமேதாவி அங்குராசு


PUBLISHED ON : ஏப் 22, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 22, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!

பருவே போ... போ....!'பரு' என்பது சிறுமிகளுக்கு, சோர்வை தரும் விஷயம்.பரு,குட்டி குட்டி கொப்புளம் என பலதும் வரலாம். முகத்தில் எது வந்தாலும், அதன் மேல் கை வைப்பதோ, கிள்ளுவதோ கூடவே கூடாது. முதலில் பருவை கிள்ளவே கூடாது. அந்த இடத்தின் கறுப்பு மறைய வேண்டும் என்றால் ஏதாவது மெடிசன்ஸ் கண்டிப்பாக அப்ளை செய்ய வேண்டும்.தலா 1/2 டீஸ்பூன் அரிசிமாவு, பயத்தமாவு. ஒரு டீஸ்பூன் தயிர், தலா ஒரு சிட்டிகை வேப்பம்பொடி, புதினாபொடி கலந்து பேஸ்ட் போல செய்து முகத்தில் அப்ளை செய்து 10,15 நிமிடங்கள் ஊர வைத்து வாஷ் பண்ணுங்கள். பெங்களூரு தக்காளி ஜூஸ், புதினா பொடி கலந்து முகத்தில் 10,15 நிமிடங்கள் ஊற வைத்து கழுவலாம். மாதுளம் பழத்தோல் பொடியை தண்ணீர் அல்லது பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி 10,15 நிமிடங்கள் ஊற வைத்து கழுவவும். டெட்செல்ஸ், ஸ்கின் இன்பெக்ஷன் இதன் மூலம் சரியாகிவிடும். பரு கரும்புள்ளி, குட்டி குட்டி கொப்புளங்களும் வராது... ட்ரை செய்து பாருங்கள்.

வாயில் வைக்காதே!வளரும் குழந்தைகள் எதை எடுத்தாலும் வாயில் வைத்து கொள்ளும். இதனால் இன்பெக்ஷனாகி அடிக்கடி வாந்தி, பேதி வரலாம். இதற்கு என்னதான் செய்வது? இதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. குழந்தை வாயில் வைக்கும்படியாக எதையும் கீழே வைக்க வேண்டாம். குழந்தைக்கு பல் முளைக்கும் பருவத்தில் இப்படித்தான் நடந்து கொள்ளும். பேபி ஷாப்களில் குழந்தை கடிக்க, 'டீத்தர்ஸ்' என்ற பொருட்கள் விற்கின்றனர். அதை வாங்கி குழந்தையின் கையில் கொடுங்கள். அதையும் தினம் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். கூடியவரை கிடைத்ததை எல்லாம் வாயில் கடிக்கும் பழக்கத்தை எந்த விதத்திலாவது திசை திருப்புவது நல்லது.

கப்பல்கள் மாயமாய் மறைகின்றன!விடை தெரியாத சில இயற்கை வினோதங்களில் மிக மிக முக்கியமானது 'பெர்முடா' முக்கோணம். வடஅட்லாண்டிக் பெருங்கடலில் பெர்முடா மியாமி, போர்டோரிகோ ஆகிய மூன்று பகுதிகளையும் இணைத்தால் ஒரு முக்கோண வடிவம் கிடைக்கும். இதைத்தான் 'பெர்முடா' முக்கோணம் என்கின்றனர்.பல மர்மங்களை உள்ளடக்கியது இந்த கடல் பகுதி. இந்த முக்கோண பரப்புக்குள் வந்த கப்பல்கள், விமானங்கள் பல உரிய இடத்திற்கு போய் சேரவில்லை. புறப்பட்ட இடத்திற்கும் திரும்ப வரவில்லை. இவை அந்த முக்கோண பரப்புக்குள்ளேயே மாயமாக மறைந்து விடும்.ஏன் இந்த கப்பல்கள் இவ்வாறு காணமால் போகின்றன என்பதை ஆராய்வதற்காக 40 கப்பல்கள், 20 அதிநவீன விமானங்கள் சென்றன. ஆனால், அவற்றையும் காணவில்லை. 1872-ல் அந்த பகுதிக்குள் அப்பாவியாக தலை நீட்டிய மேரி செலஸ்டின் என்ற கப்பல்தான் முதன்முதலாக மாயமானது. தொடர்ந்து 'மெடர்', “சைக்கேளாப்ஸ், கரோல்ஏடீரிஸ், கன்னிமரா போன்ற பிரமாண்ட கப்பல்களும், பிளைட் 19, ஸ்டார் டைகர் போன்ற போர் விமானங்களும் இந்த கடல் எல்லையின் மேல் மிதந்த மற்றும் பறந்த சுவடுகளே இல்லாமல் மாயமாகி விட்டன. இதனுள் பயணம் செய்த ஆயிரக்கணக்கான மக்களும் பலியானார்கள்.நடந்து என்ன? என்ற ஆராய்ச்சியில் நிபுணர்கள் களத்தில் குதித்தனர். வாலண்டைன் என்ற கடல் ஆராய்ச்சியாளர் கப்பல்கள் எங்கும் போகவில்லை. அவை எல்லாமே அங்குதான் வேறொரு பரிணாமத்தில் நிற்கின்றன என்று குழம்பினார். அமெரிக்கா விஞ்ஞானிகள் முக்கோண ஏரியாவுக்குள் கிடப்பொருட்கள் சின்னச்சின்ன அணுக்காளாக உடைந்து விடுவதால் பொருட்கள் மாயமாகி விடுகின்றன என்று கூறினார்கள்!ஏலியன்கள் (வேற்று கிரக மனிதர்கள்!) தாக்குதல், மிக அதிகமான புவியீர்ப்பு விசை, கடலின் நீரோட்டத்தில் இருக்கும் மின்னோட்டம் என்று ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னார்கள். ஆனாலும் பெர்முடா முடிச்சு அவிந்தபாடில்லை. அதற்குள் அடுத்து பூதமாக ஜப்பானின் தென்கிழக்கு கடற்கரையில் செல்லும் கப்பல்கள் இப்போது காணமால் போக ஆரம்பத்திருக்கின்றன. ஜப்பான் விஞ்ஞானிகளாலும் இதனை கண்டுப் பிடிக்க முடியவில்லை. ஆனால், இந்த மர்மான பகுதிக்கு 'டிராகன் டிரையாங்கிள்' என்று பெயரிட்டு கவலையோடு ஆராய்ந்து வருகின்றனர். எப்போதும் இந்த இரண்டு முக்கோண மர்மங்களுக்கும் விடை கிடைக்கும் என்பதுதான் புதிராகவே உள்ளது.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!இது 'பாலக் பக்கோடா' செய்முறை:தேவையானவை:பாலக்கீரை - ஒரு கட்டு, கடலை மாவு - அரை கப், அரிசி மாவு-கால் கப், நசுக்கிய இஞ்சி, பூண்டு, சோம்பு-ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள்-கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:கீரையை ஆய்ந்து தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கவும். அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, நசுக்கிய இஞ்சி, பூண்டு, சோம்பு,பெருங்காயத்தூள் சேர்த்து பிசறவும். பிறகு கொஞ்சம் தண்ணீர் விட்டு பக்கோடாவுக்கு தேவையான பதத்தில் பிசைந்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு பக்கோடாக்களாக போட்டு பொரித்தெடுக்கவும்.

நம் நண்பர்கள்!மனிதன் 9,400 ஆண்டுகளுக்கு முன்பே நாயை வளர்த்துள்ளதும், அவற்றை அவர்கள் உணவுக்காக பயன்படுத்தியதும் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. மெய்னே பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் 1,000 முதல் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் உணவு முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியில், 1970ல் நடந்த அகழ்வாராய்ச்சியின் போது 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் மற்றும் விலங்குகளின் எலும்புகள், மண்டை ஓடுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கிடைத்தன. அவற்றை வைத்து, உணவு முறைகள் குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.இந்த ஆய்வு குழுவில் இடம் பெற்றிருந்த, சாமுவேல் பெல்நேப் என்ற அறிவியல் மாணவர், அந்த எலும்புகளில் இருந்து சிறிய வித்தியாசமான எலும்பு ஒன்றை கண்டெடுத்தார். அதை சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, அது நாயின் கால் பகுதியை சேர்ந்த எலும்பு என்பதும், அது மனிதனால் சாப்பிடப்பட்டு ஜீரண பாதை வழியாக பயணித்து வெளியேறிய எலும்பு 9400 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் தெரியவந்தது.இதன்மூலம் மனிதர்கள் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாய்களை வளர்த்ததும், அவற்றை உணவுக்காக பயன்படுத்தியது தெரியவந்தது. நல்லவேளை 'நாய்-உணவு' உண்பது தொடரவில்லை, நாகரிகமடைந்த மனிதனிடம்.அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us