தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஜன 01, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புத்தாண்டு பாரம்பரியம்!

அலைபேசி வழியாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் வாழ்த்து பரிமாறும் பழக்கம் அதிகரித்துவருகிறது. இந்த நிலையிலும் பாரம்பரியம் மாறாமல் புத்தாண்டு கொண்டாடுவதும், வாழ்த்துவதும் உலகில் பல நாடுகளிலும் நடந்துவருகிறது. அது பற்றி பார்ப்போம்...

ஜப்பான்!

பழமை, பாரம்பரியம் என்றால் நினைவுக்கு வருவது கிழக்காசிய நாடான ஜப்பான் தான். இங்கு புத்தாண்டு, மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது.

ஆண்டின் கடைசி நாள் இரவு உணவுக்குப்பின், புத்தாடை அணிந்து ஆலயம் செல்வர். அந்த நேரத்தில் கடவுள் வீட்டுக்கு வந்தால் வரவேற்கும் விதமாக உரிய ஏற்பாடு செய்திருப்பர். அதாவது, வீட்டு முகப்பில், மூங்கில் குருத்து மற்றும் இலைகளால் செய்த வளையம் ஒன்றை மாட்டியிருப்பர்.

பிரார்த்தனை கூட்டம் முடிந்து நள்ளிரவு, 12:00 மணிக்கு, பிரமாண்ட கோவில் மணி, 108 முறை ஒலிக்கும். புத்த மதத்தில், மனித மனத்தை அலைக்கழிக்கும், 108 விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அவற்றை செய்திருந்தால் மன்னிப்பு கேட்கும் வகையிலான குறியீடே இந்த மணிஓசை.

புத்தாண்டில் உதயமாகும் சூரியனை ஆர்வத்துடன் வரவேற்று வணங்குவர் ஜப்பானியர்.

ஆஸ்திரேலியா!

இங்குள்ள சிட்னி நகர், ஆப்ரா ஹவுஸ் கலையரங்கில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டம் பிரசித்தி பெற்றது. இதில் பங்கேற்க பலரும் போட்டிபோடுவர். இந்த நிகழ்வை அரசே நடத்துகிறது. இங்கு ஒலி, சூழலை மாசுபடுத்தும் பட்டாசு, மத்தாப்புக்கு அனுமதியில்லை.

நள்ளிரவு, 12:00 மணிக்கு, 'ஹேப்பி நியூ இயர்' என்ற வாசகம் வானில் தோன்றும். தொடர்ந்து, வானில் வண்ணங்களின் கலவை காட்சியாக வரும். இது, சக்தி வாய்ந்த லேசர் ஒளி வெள்ளத்தில் அமைக்கப்படுகிறது. இறுதியில், ஆஸ்திரேலிய தேசிய கீதம் பாடப்படும்.

தென் கொரியா!

கிழக்காசிய நாடான தென் கொரியாவில், ஆண்டு பிறப்பு அரசால் அறிவிக்கப்படும். அதையொட்டி, மூன்று நாள் விடுமுறை. ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் விலை உயர்ந்த பரிசுகளை வழங்கி மகிழ்விக்கின்றன, நிறுவனங்கள்.

புத்தாண்டில் பெரும்பாலோர் சொந்த கிராமத்துக்குச் சென்றுவிடுவர். பெற்றோர், உறவினர்களுடன் விருந்து உண்பது தான் அன்றைய முக்கிய நிகழ்வு. பாரம்பரிய முறையில் புத்தாடை அணிந்து, பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் ஆசிபெறுவர். வயதுக்கேற்ப, எந்தத் திசையில் எப்படி அமர்ந்து வணங்க வேண்டும் என்ற நடைமுறையும் இங்கு கடை பிடிக்கப்படுகிறது.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us