தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : பிப் 05, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 05, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நல எண்ணெய்!

உணவில், எண்ணெய்க்கு தனித்துவம் உண்டு. சமையல் எண்ணெயில் பல ரகங்கள் உள்ளன. அவற்றில், 'ரைஸ்பிரான்' எண்ணெயும் ஒன்று.

நெல்லில் இருந்து அரிசியை பிரிக்கும் போது, அரிசி - உமி இடையே, அதிக சத்து மிக்க பொருள் படிந்து இருக்கும். கைக்குத்தல் முறையில் பிரித்தால் அரிசியில் இந்த பொருள் சேர்ந்து இருக்கும். இயந்திர முறையில் பிரித்தால், உமியுடன் அகன்று விடும்.

இதன் பெயர் தவிடு; ஆங்கிலத்தில், 'ரைஸ்பிரான்' என்பர். தவிட்டில், 21 சதவீதம் உள்ள எண்ணெய் சத்து, உடல் நலனுக்கு உகந்தது.

உடல் நலனுக்கு ஏற்றதாக, மூன்று வகை எண்ணெயை, உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது. அவற்றில் ஒன்று ரைஸ்பிரான் எண்ணெய். மற்றவை, ஆலிவ் மற்றும் கார்ன் எண்ணெய். இவற்றில், ஆலிவ் எண்ணெய் விலை மிக அதிகம்.

பொதுவாக, 'பளிச்' வெண்மை நிறத்துக்கு, மக்களிடையே வரவேற்பு அதிகம். இந்த மனநிலையை அறிந்த உணவுப்பொருள் வணிக நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளை வேதியியல் முறையில், 'பிளீச்' செய்கின்றன. இதனால், சமையல் எண்ணெய் இயற்கை நிறம் மாறி, 'பளிச்' என காட்சி தரும். அதில் நுண்ணுாட்டச் சத்துக்களும் காணாமல் போய்விடும்.

ரைஸ்பிரான் எண்ணெயில், 'ஒரைசனால்' என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது; உடலில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதை உணவாகக் கொண்டால், இதயம் சம்பந்தமான நோய் பாதிக்கும் வாய்ப்பு குறையும்.

கிழக்காசிய நாடான ஜப்பானில் இதை, 'ஹார்ட் ஆயில்' என்றும், அமெரிக்காவில், 'ஹெல்த் ஆயில்' என்றும் அழைக்கின்றனர். ரைஸ்பிரான் எண்ணெயில் உள்ள, 'லைப்போயிக்' என்ற அமிலச்சத்து, ரத்தத்தில் சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது; தோலில் சுருக்கம் விழுவதை தடுக்கிறது.

மாதவிடாய் காலங்களில் பெண்களின் வலியைப் போக்க உதவுகிறது. தேவையான வலிமை மற்றும் ஆற்றலை தருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த எண்ணெயில் உறிஞ்சும் திறன் குறைவு. இதை பயன்படுத்தி தயாரிக்கும் உணவில் பிசுபிசுப்பு தன்மை அதிகம் இருக்காது. செரிமான சக்தியும் அதிகம்.

ரைஸ்பிரான் எண்ணெய்க்கு, தனி மணமோ, சுவையோ கிடையாது. சமைக்கும் பொருட்களின் மணத்தையும், சுவையையும் கொண்டிருக்கும்.

தரமான உணவுப் பொருட்களை உண்டு உடல் நலம் பேணுவோம்.

மாற்று எரிபொருள் மகிமை!

வாகனத்தின் ரத்தமாக கருதப்படுவது, எரிபொருள். பெட்ரோல், டீசல் எல்லாம் இதில் அடக்கம். இவற்றின் விலை, விண்ணை தொட்டுவிட்டது. இதற்கு மாற்று வழியைத் தேடிக்கொண்டிருக்கிறது அறிவியல் உலகம். ஹைட்ரஜன் வாயு, மாற்று எரிபொருளாக அமைய வாய்ப்புள்ளது.

தற்போது, மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் சந்தையில் வருகின்றன. அதை இயக்க பேட்டரி பயன்படுத்துகிறோம். பேட்டரி என்பது, மின்சாரத்தை சேமித்து பயன்படுத்தும் கருவிதான். உற்பத்தி சாதனம் அல்ல.

மாற்று எரிபொருளாக, ஹைட்ரஜன் வாயு பயன்பாட்டுக்கு வந்தால், பேட்டரி தேவை இருக்காது. வாயுவை உள்வாங்கி, மின் உற்பத்தி செய்தபடியே வாகனம் நகர்ந்து கொண்டிருக்கும். பெட்ரோல் நிரப்புவது போல, ஹைட்ரஜன் வாயுவை நிரப்பி பயணிக்கலாம்.

ஆனால், தற்போதைய நிலையில் ஹைட்ரஜன் வாயுவை சேமித்து பயன்படுத்த பெரும் பொருட்செலவு ஏற்படுகிறது. அதை சேமிப்பதற்கு தேவையான, 'பியூல் செல்' தயாரிக்க பிளாட்டினம் என்ற, விலை உயர்ந்த உலோகம் தேவை. அது, தங்கத்தை விட மதிப்பு வாய்ந்தது.

ஆனாலும், தொழில் நுட்பத்தை மேம்படுத்த ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அறிவியல் தொழில் நுட்பத்தை மேம்படுத்தி, வாழ்வு பயணத்தை செப்பனிடுவோம்.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us