தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மூளை விளையாட்டு!

மூளை விளையாட்டு!

மூளை விளையாட்டு!


PUBLISHED ON : பிப் 05, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 05, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனித மூளையின் மொத்த எடையில், 60 சதவீதம் கொழுப்பால் ஆனது. மூளை பெரிதாக இருந்தால் அறிவு அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் உண்மையில்லை. மூளையின் அளவுக்கும், அறிவுத் திறனுக்கும் சம்மந்தம் இருப்பதாக எந்த ஆய்வும் நிரூபிக்கவில்லை.மனித மூளை பற்றி, சில உண்மைகளை பார்ப்போம்... மூளை...* எப்போதும் ஓய்வெடுப்பதில்லை; விழித்திருக்கும் நேரத்தை விட, உறங்கும் போது கூடுதல் செயல்திறனுடன் இயங்கும்* எந்த விஷயத்தையும் சரியாக பார்க்க உதவுகிறது. கண்கள் நிஜத்தில் ஒரு பொருளை தலைகீழாக பதிவு செய்யும். மூளைதான் அதை சீராக்கி உதவுகிறது* மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. அதாவது, 25 வாட்ஸ் திறனுள்ள மின்விளக்கை எரிய செய்யும் மின்சாரத்தை மூளையால் தரமுடியும்* மண்டை ஓட்டுக்குள் நகரும் போதும், உந்தும் போதும் வலி உணராது. இதனால் விழித்திருக்கும்போதே, மூளையில் அறுவை சிகிச்சை செய்ய முடியும். மயக்க நிலையில் அறுவை சிகிச்சை செய்வதில்லை. ஏனென்றால், உணர்வுடன் இருக்கும்போது தான், மூளை செயல்பாட்டை அறிய முடியும்* மூளையில் நரம்பு இழைகளின் நீளம், 1.61 லட்சம் கி.மீ., இதன் உந்துவிசையால் உடலின் அனைத்து பாகத்திலும் அணுக்கள் உணர்வை பெறுகின்றன* உடலின் பெரும்பகுதி உறுப்புகள், 20 வயதில் வளர்ச்சியை நிறுத்தி விடும். ஆனால், 40 வயதிலும் மூளை வளர்ச்சி நிற்காது. புதிய விஷயங்களை கற்க விரும்பினால் எப்போதும் ஏற்கும் * மூளை அடர்த்திக்கும் அது உட்கொள்ளும் சக்தி அளவுக்கும் தொடர்பே இல்லை. உடலின் மொத்த எடையில் மூளை, இரண்டு சதவீதம் தான் இருக்கும். ஆனால், மொத்த சக்தியில், 25 சதவீதத்தை பயன்படுத்தும்* மூளை செயல்பாடு வினாடிக்கு, 1 லட்சம் ரசாயன மாற்றங்களை நிகழ்த்துகிறது. அதாவது, பொருட்களைப் பற்றி சிந்தித்து, நினைவுப்படுத்தி, கணினியில் பதிவு செய்ய உதவுகிறது* மூளை அணுக்கள் எண்ணிக்கை, இரண்டு வயதில் இருந்த அளவுதான், முதிர் வயதிலும் இருக்கும். ஒருவேளை, குறையக்கூடும் * கர்ப்ப காலத்தில் பெண்ணின் மூளை வித்தியாசமாக இருக்கும். குழந்தையை பிரசவித்த ஆறு மாதங்களுக்கு பின், இயல்பு நிலைக்கு திரும்பும்* வாழ்நாளில் மூளை சேமித்திருக்கும் தகவல் துணுக்குகளை, 'குவாட்ரில்லியன்' என்ற மதிப்பால் அளக்கின்றனர். ஒன்றுக்கு பின், 15 ஜீரோக்கள் போட்டால் இந்த மதிப்பு கிடைக்கும்; போட்டு பாருங்கள்; இதுவும் மூளையின் விளையாட்டுத்தான்.- பாலாஜி கணேஷ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us