தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/டைனோ என் தோழன்! (22)

டைனோ என் தோழன்! (22)

டைனோ என் தோழன்! (22)


PUBLISHED ON : பிப் 05, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 05, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: அன்டார்டிகா உறைபனிக்குள் கிடந்த டைனோசர் உடலை வெட்டி, டைனோ குட்டியை உருவாக்கி, சிறுவன் சந்திரஜெயனுக்கு பரிசளித்தார் விஞ்ஞானி யோகிபாபு. அதை பராமரிப்பதில் பல பிரச்னைகள் ஏற்பட்டன. பலரும் அதை பார்க்க வந்தனர். இனி -

கவர்ச்சியான தோற்றத்தில் இருந்தவர் நளினமாக பேசினார்.''நாங்க ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரிலிருந்து வருகிறோம்... அங்கு, 'டயர் கார்டன் ஸ்டோன் பிரன்' என்ற மிருக காட்சி சாலை இருக்கிறது... அதன் தலைமை நிர்வாகிகளாக செயல்படுகிறோம்; எங்க மிருக காட்சி சாலையைப் பற்றி கேள்விபட்டிருக்கிறீரா சந்திரஜெயன்...''''இல்லை...''''எங்க மிருக காட்சி சாலை, ௧௭௫௨ல், ஆரம்பிக்கப் பட்டது; உலகின் மிக பழமையான ஒன்று...''''இந்தியாவில், அசாமில் காசி ரங்கா தேசிய பூங்கா உள்ளது...''''ஆம்... அங்கு காண்டாமிருகங்கள் அதிகம்...''''உண்மை...''''எங்களிடம், குறிப்பாக ஆர்டிக் துருவ ஓநாய்கள், சைபீரியன் புலி, நீர் கீரி, ஆப்பிரிக்க யானைகள் அதிகம் இருக்கின்றன...''''நீங்க எதற்காக என்ன தேடி வந்திருக்கீங்க...''''வியாபாரம் பேச வந்திருக்கிறோம்...''''வியாபாரமா... சிறுவனாகிய என்னிடமா...''''யாரிடம் அபூர்வமான விஷயம் இருந்தாலும் வியாபாரம் பேசலாம்...''பாதி யூகித்து விட்டான்; இருந்தாலும், அவர்கள் வாயைக் கிளறி அறிய விரும்பினான் சந்திரஜெயன்.''என்னிடம் அப்படி எதுவுமே இல்லையே... தவறான நபரை பார்க்க வந்திருக்கிறீங்க...''''இல்லை... எங்க இந்திய ஏஜென்டிடம் பேசினோம்; அவர் உங்க பெயரையும், விலாசத்தையும் உறுதி செய்தார். நாங்க எப்போதும் சரியான நபரிடம் தான் வியாபாரம் பேசுவோம்...''''என்ன வியாபாரம்...''''எங்க மிருக காட்சி சாலைக்கு அபூர்வமான மிருகங்களை கொண்டு வருவதற்கு பிரம்ம பிரயத்தனம் செய்வோம்; அப்படியான முயற்சி தான் இதுவும்...''''எனக்கு புரியவில்லை...''''புரியாத மாதிரி நடிக்கிறீங்க... பேரத்தை அதிகப்படுத்தும் உத்தி இது...''''வெளிப்படையாக சொல்லுங்க; உங்களுக்கு என்ன வேணும்...''''உங்களிடம் டைனோசரின் குட்டி இருப்பதாக கேள்விப்பட்டோம்...''''யார் சொன்னது...''''ஊடகங்களில் கடந்த, ௧௫ நாட்களாக இந்த செய்தி தான் பிரதானமாக வருகிறது; பல புகைப்படங்களில், நீங்களும், உங்க வளர்ப்பு மிருகம் டைனோவும் சிரித்தபடி போஸ் கொடுப்பதை பார்த்தோம்...''''அதற்கென்ன இப்போ...''''அழிந்து போன டைனோசர் குட்டியை வைத்திருப்பது உலகின் மிக விலை உயர்ந்த வைரத்தை வைத்திருப்பதற்கு சமம். டைனோசரை மரபியல் வரைப்படம் மூலம், போன்சாய் உத்தி மூலம் உருவாக்கியிருப்பீர் என நம்புகிறோம்...''''அந்த டைனோ தற்சமயம் என்னிடம் இல்லை...''''பொய் சொல்றீங்க... உங்க தோட்டத்துக்குள் அத்து மீறி நுழைந்தால் டைனோவை பார்த்து விட முடியும்...''''அத்துமீறி தான் பாருங்களேன்...''''நாங்க நாகரிகம் தெரிஞ்சவங்க; அடுத்தவர் நாட்டுக்குள் கண்ணியமாக எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிவோம்...''''தொடர்ந்து பேச ஒன்றுமில்லை... நீங்க போகலாம்...''''அவசரப்படாதீங்க... நீங்க டைனோவை வளர்ப்பது பிரச்னைக்குரிய விஷயம். வளர்க்க தெரியாமல் இறந்து விட்டால் என்ன செய்வீங்க; உங்கள ஒரே நொடியில் கோடீஸ்வரராக்க விரும்புகிறோம்...''''எப்படி...''''டைனோவை எங்களிடம் ஒப்படைக்க எத்தனை கோடி ரூபாய் தேவை என கூறுங்க... பேரம் முடிந்த மறுநொடி பணம் உங்க வங்கி கணக்குக்கு வந்து விடும்...''''நீங்க எத்தனை கோடி தருவதா உத்தேசம்...''''நல்ல கேள்வி... இதை தான் எதிர்பார்த்தோம்; ௨௦ கோடி ரூபாய் தருகிறோம்; வாங்கிட்டு, டைனோவை ஒப்படைக்கிறீங்களா...''சிரித்தான் சந்திரஜெயன்.''குறைவான தொகை என எண்ணினால்... 50 கோடி ரூபாய்...''''மன்னிக்கவும்... நீங்க, 100 கோடி கொடுத்தாலும் ஒப்புக்கொள்ள மாட்டேன்; இன்னொரு முக்கியமான விஷயம்... இந்த டைனோவை உருவாக்கி கொடுத்தவர், பெங்களூருவை சேர்ந்த விஞ்ஞானி யோகிபாபு. அவருக்கு சொந்தமான பொருளை நானெப்படி விற்க முடியும்...''''நாங்க அவரை தொடர்பு கொள்ளட்டுமா...''''அவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்; நேரத்தை விரயம் செய்யாம புறப்படுங்க...''''இது தான் இறுதி முடிவா...''''ஆமாம்...''''உங்கள தாக்கி டைனோவை துாக்கி செல்ல முடியும்...''''செய்துப் பாருங்களேன்...''''சரி... நாங்க கிளம்புறதுக்கு முன், டைனோவை ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும். அதற்காவது அனுமதிப்பீங்களா...''''மாட்டேன்... பாத்தால் இன்னும் அதிக விலைக்கு அதை வாங்க துடிப்பீங்க... நீங்க கிளம்பலாம்...''''இது ஆணவ போக்கு... கண்டிக்கிறோம்...''''இது ஆணவமல்ல; டைனோ மீதான காதலை, விலை பேச விரும்பாத கம்பீரம்...''கோபத்தில் தரையை உதைத்தபடி கிளம்பினர்; காத்திருந்த துபாஷ் எட்டிப் பார்த்தபடி, ''என்ன பேரம் முடிஞ்சுதா...'' என்றான்.''இருந்து நாலு உதை வாங்கிட்டு போ... அதுதான் உனக்கு கமிஷன்...'' சீறிப் பாய்ந்தது அந்த கார்.- தொடரும்...- வஹித்தா நாசர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us