தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஏப் 23, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 23, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பச்சைமிளகாய்!

உடல் நலனை பேணி பாதுகாக்கும் குணம், பச்சை மிளகாயில் உள்ளது. அதை, உண்பதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம்...

பச்சை மிளகாயில்...

* ஆன்டி- ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளதால், உடல் பாதுகாவலனாக விளங்குகிறது

* உடல் உறுப்புகளை நன்கு இயங்க வைக்கிறது

* உயிர்சத்தான, 'வைட்டமின் - சி' அதிகம்

* நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது

* மூக்கடைப்பு போன்ற உபாதைகளை சீராக்குகிறது

* உடல் எடையை குறைக்க உதவுகிறது

* உணவில் கட்டுப்பாடு கடை பிடிக்கும் போது கூட, மிளகாயைப் பயன்படுத்தலாம்

* நுரையீரல் புற்றுநோய் ஆபத்து குறையும்

* மூளையில், 'என்டோர்பின்ஸ்' என்ற பொருளை உற்பத்தி செய்கிறது. இது மனநலனை சிறப்பாக பேணி காக்கிறது.

காரமான உணவை உண்டதும் மகிழ்ச்சியான மனநிலை ஏற்படும். இது தற்செயலாக ஏற்படுவது அல்ல; மிளகாயில் உள்ள சத்துகளால் உண்டாகிறது.

காரம் மிக்க மிளகாயை, உரிய அளவில் பக்குவமாக உண்டு நல்ல பலன் பெறுவோம்!

நிற கவர்ச்சி!

மனித மனம், 'நிறம்' என்ற பெருங்கவர்ச்சியில் சிக்குவதால் தவிப்புக்குள்ளாகிறது. உடை, உணவு, நட்பு, சுற்றம் என, எல்லாவற்றையும் நிற அடிப்படையில் தேர்வு செய்ய விரும்புகிறது. மனித குலத்தில் அவ்வப்போது ஏற்படும் அழிவுக்கும், இந்த நிறம் பற்றிய எண்ணமே முக்கிய காரணம்.

உணவில்...

குறிப்பாக, விரும்பும் இனிப்புகளில் நிற விளையாட்டு ஆபத்தானது. ஈர்க்கும் நிறங்கள் கலந்த இனிப்பு ஆரோக்கியத்தை பாதிக்கும். செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட உணவு உடல் நலத்தை கெடுக்கும். கவர்ச்சியான உணவுகள், சுவை உணர்வை துாண்டும்; உடல் நலத்தை பாதிக்கும்.

மனம் மயக்கும், 'மெட்டானியல் எல்லோ' என்ற மஞ்சள் வண்ண ரசாயன பொருளை, உணவில் பயன்படுத்த தேசிய சத்துணவு நிறுவனம் தடை விதித்துள்ளது. ஆனால், லட்டு, பருப்பு கலந்த உணவில் இது கலக்கப்படுகிறது.

இதை தொடர்ச்சியாக சாப்பிட்டால், தொண்டைப் புண், குரல்வளை பாதிப்பு, குமட்டல், வாந்தி, மூச்சுத்திணறல் போன்ற உபாதைகள் ஏற்படும். சிலருக்கு, 'மெத்திமோ குளோபினேமியா' என்ற ஒவ்வாமை ஏற்படும்.

இளைஞர்கள் பாஸ்ட் புட், பீட்சா, ஐஸ்கிரீம் என, கவர்ச்சியாக செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட உணவு வகைகளை விரும்பி உண்கின்றனர். இது, பின்னாளில் ஆரோக்கிய சீர்கேட்டை உண்டாக்கும்.

கவர்ச்சியாக தோன்றும் உணவு வகைகளை தவிர்த்து, இயற்கையாக கிடைக்கும் உணவை உண்டு நலம் பெறுவோம்.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us