PUBLISHED ON : அக் 08, 2022

கின்னஸ் பீட்சா!
இளைஞர் விரும்பும் உணவுகளில் ஒன்றாக, பீட்சா உள்ளது. சைவம், அசைவமாக கிடைப்பதால் யாரும் விட்டு வைப்பதில்லை. இது, ஐரோப்பிய நாடான இத்தாலி உணவு. உலகம் முழுதும் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. பீட்சா உணவு தயாரித்து உலக சாதனை படைத்த நிகழ்வுகள் நடந்துள்ளன. அது பற்றி பார்ப்போம்...இத்தாலி, ரோம் நகரில் என்.ஐ.பி., என்ற உணவு நிறுவனம், 1,261.65 சதுர மீட்டர் பரப்பளவில் பெரிய பீட்சாவை, 2012ல் உருவாக்கியது, அது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ரோமானிய பேரரசர் ஆக்டேவியன் அகஸ்டஸ் நினைவாக தயாரித்த இந்த பீட்சாவிற்கு, 'ஒட்டாவியா' என பெயரிட்டிருந்தனர்.
அமெரிக்கா, கலிபோர்னியா நகர சமையல் கலைஞர்கள், 1.9 கி.மீ., நீளத்தில் பீட்சா உணவு தயாரித்து, 2017ல் கின்னஸ் உலக சாதனை படைத்தனர். இதை தயாரிக்க, 3,632 கிலோ மாவு, 1,634 சீஸ், 2,542 கிலோ தக்காளி சாறு பயன்படுத்தினர். இந்த பிரம்மாண்ட பீட்சாவை, 8 மணி நேரத்தில் சமைத்து, சாதனை படைத்தனர் சமையல் கலைஞர்கள்.
நலம் காக்கும் வைட்டமின்!
உடல் வளர்ச்சிக்கு, சமச்சீராக வைட்டமின் சத்துக்கள் தேவை. இதற்கு தேவையான உணவை முறையாக எடுத்துக் கொள்ளாவிட்டால் கடும் பாதிப்புகள் ஏற்படும். நோய்கள் ஒட்டிக் கொள்ளும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத வைட்டமின் சத்துக்கள் பற்றி பார்ப்போம்..
இது குறைந்தால், குழந்தைகளுக்கு வயிற்று மந்தம், அஜீரணம், ரத்த சோகை போன்ற பாதிப்புகள் ஏற்படும். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு அதிகம். வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, பச்சை காய்கறிகளில் இந்த சத்து அதிகம் உள்ளது.
இந்த சத்து குறைந்தவர், மன அமைதி இழப்பர். தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்பு பலம் குறையக்கூடும்; ஈறு வீங்கி பற்கள் பலவீனமாகும். ஈறுகளில் ரத்தம் கசியும். ஆரஞ்சு, திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லி, எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளைக்கிழங்கு, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் இந்த சத்து அதிகம்.
இந்த சத்து குறைந்தால், குழந்தைகளுக்கு எலும்புகள் வலுவிழக்கும். கால்கள், வில் போல் வளைந்து விடும். போதுமான சூரிய ஒளியிலேயே இந்த சத்து கிடைக்கும். முட்டை, சிவப்பு மாமிசமுள்ள மீன்கள், வெண்ணெய் ஆகியவற்றிலும் இந்த சத்து அதிகம் உள்ளது.
இந்த சத்து குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மை ஏற்படும். குழந்தைகளுக்கு ரத்தம் உறைதல் தொடர்பான நோய்கள் ஏற்படும். கோதுமை, கீரைகள், பச்சைக் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்தால் இந்த சத்து சமச்சீராக கிடைக்கும்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
