sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

அதிமேதாவி அங்குராசு!

/

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஆக 19, 2023

Google News

PUBLISHED ON : ஆக 19, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணெய் பழம்!

வெப்ப மண்டலத்தில் விளைகிறது வெண்ணெய் பழம். மிகவும் மிருதுத் தன்மை வாய்ந்தது. தனித்துவமான நறுமணம் உடையது. வெளிப்புறத்தோல் பேரிக்காய் போல் காணப்படும். இது, வெண்ணெய் பேரிக்காய் என்றும் அழைக்கப்படுகிறது.

இதில், 14 வகை தாதுக்கள் நிறைந்துள்ளன. அனைத்தும், உடல் இயக்கத்தை ஒழுங்கு படுத்தும்; உடல் வளர்ச்சியை துாண்டும். வைட்டமின் - ஈ சத்து அதிகம். எளிதில் செரிக்கும், 'மோனோ அன்சாச்சுரேட்டட்' என்ற கொழுப்பை கொண்டுள்ளது.

ஜீரணக் கோளாறு, சிறுநீரகம், கல்லீரல் மற்றும் தோல் தொற்றுகளை எதிர்க்கும். ரத்த சோகையை தடுக்கும். ரத்தத்தில் சிவப்பு அணு உற்பத்திக்கும் உதவி புரியும். சருமத்தை மென்மையாக்கும்.

இதில், 'ஸ்டெரோலின்' என்ற புரதம் அதிகம் உள்ளது. இந்த சத்து குறைபாட்டால் தான், சருமம் சுருங்கி முதுமை தோற்றம் ஏற்படுகிறது. அழகு மிக்க ஆரோக்கிய சருமம் பெற, வெண்ணெய் பழம் சாப்பிடலாம்.

நலம் தரும் நாவல்!

மருத்துவ குணம் உடையது நாவல் பழம். இந்திய கறுப்பு செர்ரி, ராம் நாவல் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. நீரிழிவு நோய்க்கு நிவாரணியாக கருதப்படுகிறது.

வெப்பம், மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும். இந்தியாவில், பரவலாக காணப்படுகிறது. இதில், இரண்டு ரகங்கள் உள்ளன. ஒன்று பெரியதாக நீள் சதுர வடிவம் உடையது. அதிக இனிப்பானது. பழுத்த நிலையில் அடர் ஊதா அல்லது நீல, கறுப்பு நிறத்தில் இருக்கும். ஜூன், ஜூலை மாதங்களில் அதிகம் கிடைக்கும்.

கணிசமான அளவில் ஊட்டச்சத்து உடையது. கனிமம், புரதம், இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கால்ஷியம், பாஸ்பரஸ், வைட்டமின் - சி, பி, தாது உப்புகளும் உள்ளன.

தொடர்ந்து சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும். மலச்சிக்கல் நீங்கும். நாவல் இலையை நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேன் கலந்து குடிக்கலாம். நாவல் பழத்தில் ஜெல்லி, ஜாம், பழக்கூழ், வினிகர் மற்றும் ஊறுகாய் செய்யப்படுகிறது. இந்த பழச்சாறு வயிற்றுப்போக்கை குணப்படுத்தும்.

பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர், பசியை துாண்டும். குளிர்ச்சி மற்றும் செரிமான பண்புகள் உடையது. இதன் விதையில் புரதம், மாவு மற்றும் கால்ஷியம் சத்துக்கள் உள்ளதால் விலங்குகளுக்கு தீவனமாகிறது. நாவல் மரம் ரயில் பெட்டி படுக்கை செய்வதற்குப் பயன்படுகிறது. இம்மரத்தை பூச்சி, பூஞ்சாணம் தாக்குவதில்லை.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.






      Dinamalar
      Follow us