PUBLISHED ON : நவ 18, 2011

வந்தேமாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!
350 கோடி!
ஒரு லட்சம், 2 லட்சம், 1 கோடி , 2 கோடி இப்படி பணத்தை சொல்ல கேட்பவர்களுக்கு சபலம் ஏற்படும். ஒரு பகுதியில் ஒருவர், நேர்மையாளராக இருந்தாலே அதிசயம். ஒரு நாடே நேர்மையாயிருப்பது, மனிதர்கள் ஏற்படுத்திய அதிசயங்களில் எல்லாம் மேலான மேலானது அல்லவா?
ஜப்பானியர்கள் ரொம்பவும் நேர்மையானவர்கள். தவறு செய்ய தயங்குபவர்கள். சமீபத்தில் புகுழிமா பகுதியில் , பூகம்பம் ஏற்பட்டபோது பல்லாயிரணக்காண மக்கள் பலியாயினர். பல லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். பூகம்பத்தில் இடிந்து கிடக்கும் வீடுகள் மற்றும் கட்டிடங்களின் இடிபாடுகளில் கிடந்த பணத்தை மீட்டு போலீஸ் நிலையத்தில் ஜப்பானியர்கள் ஒப்படைத்து உள்ளனர்.
அதன்படி ரூ.350 கோடிக்கும் அதிகமான பணம் மீட்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இது தவிர தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களையும் கண்டெடுத்து உள்ளனர். அவற்றையும் போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளனர். தன்னிகரில்லா ஜப்பானியர்களுக்கு என் சிரம் தாழ்ந்த சலாம்!
உயிரை விழுங்கும் சாலை!
உலகின் மிக ஆபத்தான சாலை என்று சொல்வதும், 'மரண சாலை' என்று சொல்லப்படுவதும் தென் அமெரிக்காவில் உள்ள, 'யூங்காஸ்' சாலையைத்தான். பொலிவியாவில் உள்ள கொராய்கோ என்ற பகுதிக்கும், யூங்காஸ் பகுதிக்கும் இடையே உள்ள 43 மைல் நீளம் கொண்ட ஒரே போக்குவரத்து வழி இதுதான் என்பதால் இந்த பாதையில் தான் போக வேண்டும், இந்த பாதையில் பயணிக்கும் சாதாரண மனிதர்களைக் கூட, இந்த சாலை சாகச மனிதர்களாக மாற்றி விடுகிறது.
1930-ம் ஆண்டு பராகுவே நாட்டு சிறையில் இருந்த கைதிகளைக் கொண்டு, இந்த மிக நீள சாலை அமைக்கப்பட்டது. சாலை போடும்போதே ஏகப்பட்ட மனித உயிர்களை இந்த சாலை பலி வாங்கியுள்ளது. அமேசான் காடுகளை வட பொலிவியாவுடன் இணைப்பதும் இச்சாலைதான். மிக குறைந்த அகலம் கொண்ட இந்த சாலையின் ஆரம்பமே பயங்கரமானதாகத்தான் இருக்கிறது. சுமார் 5 மைல் நீளத்திற்கும் உயரமாக ஏறும் சாலை, சடாரென்று 1,079 அடி கீழே கிடுகிடு பள்ளத்தில் இறங்கும்.
இப்படி பாதை முழுவதும் குன்றுகளில் ஏறி இறங்கி, சேறும் சகதியும் நிறைந்து இருக்கும் பாதையில் போக வேண்டும். இதில் ஆங்காங்கே ரோட்டுக்கு மேல் அருவிபோல் தண்ணீர் கொட்டும். அந்த அருவிக்குள் புகுந்து போக வேண்டும். பாறைகள் அவ்வப்போது உருண்டு வந்து விழுவதும் திகிலின் உச்சம்.
ஒரு வாகனம் போவதற்கே திணறக்கூடிய இந்த சாலையில் இருபுறமும் இருவழி போக்குவரத்து நடைபெறுகிறது என்பது இன்னும் அதிர்ச்சி.
ஏதிரே வரும் வாகனம் உரசாமல் போவது எவரெஸ்ட் மலை மீது ஏறுவதற்கும் சமம். சாலை ஓரங்களில் தடுப்புகளோ, தடுப்பு சுவர்களோ, மரங்களோ ஏதுவும் கிடையாது. நமது ஊரில் மலையேறும்போது ஏறும் வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற அறிவிப்பு பலகை இருக்கும். அதே போல் இந்த பாதையில் கீழே இறங்குபவர்கள் சாலையின் ஓரத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்ற விதி இருக்கிறது.
மிக குறுகலான சாலையின் ஓரத்தில் போகும்போது கொஞ்சம் தவறினாலும் எலும்பு கூட மிஞ்சாது. ஒவ்வொரு வருடமும் சுமார் 300 பயணிகளாவது இந்த சாலை விபத்தில் சிக்கி இறக்கின்றனர். குறைந்தபட்சம் வாரம் ஒரு வாகனமாவது மலையில் இருந்து கீழே விழுகிறது. 1983-ம் வருடம் ஜூலை மாதம் ஒரு பஸ் விழுந்ததில், அதில் பயணம் செய்த 100 பேறும் பலியானார்கள். உலகிலேயே அதிக அபாய எண்ணிக்கை எச்சரிக்கை அறிவிப்புகள் இருக்கும் ஒரே சாலையும் இதுதான்.
இப்படி ஆபத்துகள் போட்டி போட்டு குவிந்து கிடப்பதால், மலையில் பைக் ஓட்டும், 'எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ்' சாகச வீரர்கள் இங்கு அதிகம் வருகிறார்கள்.
அதனால் இந்த பாதை ஒரு சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இந்த சாலைக்கு ஸ்பானிஷிய மொழியில் 'எல்கேமினோ திலா மூர்ட்' என்று பெயர். இதற்கு 'மரணத்தின் சாலை' என்று அர்த்தம்.
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது 'சோயா சாதம்' செய்முறை நேரம்.
தேவையானவை: பச்சரிசி 2 கப், சோயா உருண்டைகள் அரை கப், பெரிய வெங்காயம் 2, இஞ்சி-பூண்டு விழுது 2 டீஸ்பூன், மிளகாய் தூள் 4 டீஸ்பூன், தயிர்-அரை கப், கரம் மசாலாத் தூள்-1 டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், எண்ணெய், நெய், தலா 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: சோயாவை கொதி நீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்த பிறகு பச்சை தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்றாக கழுவுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில், சன்னமாக நறுக்குங்கள். குக்கரில் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, சீரகத்தை தாளித்து, வெங்காயத்தை வதங்குங்கள். பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாடை போக வதங்குங்கள். அப்புறம் உப்பு, தயிர், மிளகாய் தூள், கரம் மசாலா, சோயா ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வையுங்கள்.
பிறகு அரிசி மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி இரண்டு நிமிடங்கள் வைத்து இறங்குங்கள்.
18ம் நூற்றாண்டு கப்பல்!
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள உலக வர்த்தக மையத்தின் அருகில் உள்ள பகுதியில் அகழ்வாராய்ச்சி நடந்தது. அப்போது, பூமிக்கு கீழே 32 அடி நீளமுள்ள கப்பலின் மேல் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கப்பலின் பல்வேறு பகுதிகளும் தோண்டி எடுக்கப்பட்டன. அவை அனைத்தும் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த கப்பலின் பாகங்கள் என கருதப்படுகிறது. அந்த கப்பலின் சரியான வயதை கண்டுபிடிக்க, அதிலுள்ள மரக்கட்டையை சோதனை சாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
என்றென்றும் உங்கள்,
அன்பில் வாழும், அங்குராசு.
