PUBLISHED ON : டிச 16, 2011

அனைவருக்கும் எனது அன்பு!
பறங்கியா... பீரங்கியா?
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் இயான், ஸ்டூவர்ட் பேட்டன், 49 வயதான இவர்கள் ஹாம்ப்ஷைர் மாநிலத்தில் உள்ள லிமிஸ்டன் நகரிலுள்ள தங்கள் பண்ணையில் பறங்கிக்காயை 30 ஆண்டுகளாக பயிரிட்டு வருகின்றனர்.
இவர்கள் தோட்டத்தில் காய்ந்த ஒரு பறங்கிக்காய் எடையில் மிகப் பெரியது ஆகும். இது தினம் நாள் ஒன்றுக்கு 12 கிலோ வீதம் பருந்து வருகிறது. இதன் இப்போதைய எடை750 கிலோ. இதன் விட்டம் 17 அடி. இத சவுத்தாம்ப்டன் நகரில் நடக்கும் சாம்பியன் பறங்கிக்காய் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறது.
செஞ்சுரி போட்ட டுவின்ஸ்!
பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இரட்டை சகோதரிகள் 100 வயதை கடந்து சாதனை படைத்தனர். இதன் மூலம் உலகின் மூத்த இரட்டையர் என்ற பெருமை கிடைத்துள்ளது. லீஜே நகரை சேர்ந்தவர்கள் கேப்ரில்லி வாண்ட்ரெமர் மற்றும் மேரி ஹெண்ட்ரிக்ஸ் சகோதரிகள். இரட்டை சகோதரிகள், இந்த அக்டோபரில் 100 வயதை கடந்து உலகின் மூத்த இரட்டையர் என்ற புதிய சரித்திரம் படைத்தனர். இவர்களது பிறந்த நாள் விழாவில் 28 உறவினர்கள் உள்ளிட்ட 200 பேர் கலந்து கொண்டனர். அவர்களது குடும்பம் பாரம்பரிய பாடல்களை பாடி உற்சாகமாக பிறந்த நாளை கொண்டாடினர். நகராட்சி நிர்வாகம் சால்வை வழங்கி கவுரவித்தது. அவர்கள் கேக் மற்றும் பழரசம் அருந்தி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். பிரான்ஸ் நாட்டின் 98 வயதான சகோதரிகள், உலகின் மூத்த இரட்டையர் என கின்னஸ் உலக சாதனை புத்தகம் கூறுகிறது. வேண்டுகோளின் அடிப்படையில் மட்டுமே கின்னஸ் புத்தகத்தில் தகவல்களை இடம் பெறுகின்றன. ஆனால், பெல்ஜியம் சகோதரிகள் கின்னஸ் புத்தகத்துக்கு விண்ணப்பிக்காததால் அவர்கள் பெயர் இடம்பெறவில்லை.
2032-ல் கரண்ட் கட்டாகாதா?
'மின்சாரம் கட்' என்பது நம் தமிழ்நாட்டில் வீடு, வியாபாரம், தொழிற்சாலைகள், பள்ளிகள் என அனைத்தையும் பாதித்து மக்கள் உடலாலும், அல்லல் பட வைக்கிறது. அணுசக்தி மூலமாக மின்சாரம் தயாரிப்பதற்கான முயற்சியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. எனவே, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மின்சாரத்தின் தேவை அதிகரிக்கும் என்பதால், இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையம் சார்பாக மாமல்லபுரத்தில் சர்வ தேச மாநாடு நடைபெற்றது.
சர்வதேச அணுசக்தி ஏஜென்சி மற்றும் இந்திய அணுசக்தி அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தியதுதான் ஒரு மாநாடு. இதில் கூறப்பட்ட தகவல்கள், இந்தியாவில் அணுசக்தி மூலமாக 63 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வருகிற 2032-ம் ஆண்டில் இந்த இலக்கை எட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக, 16 கன நீர் அணு ரியாக்டர்கள் (அணுவை பிளந்து வெப்ப மடைய செய்யும் கருவி) அமைக்கப்படும். அதில், மறுசுழற்சி யுரேனியம் அடிப்படையிலான 10 ரியாக்டர்களும் அடங்கும். மொத்த இலக்கான 63 ஆயிரம் மெகாவாட் அணு மின்சாரத்தில் இலகு நீர் ரியாக்டர்கள் மூலமாக 40 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
இந்த பணிகள் அனைத்தும் சர்வதேச நாடுகளின் முழு ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்படும். அதே 2032-ம் ஆண்டில் அணு ரியாக்டர்களை ஏற்றுமதி செய்யும் நாடாகவும் இந்தியா நிகழும். 220 மெகாவாட், 540 மெகவாட், 700 மெகாவாட் ஆகிய உற்பத்தி திறன் கொண்ட கனநீர் ரியாக்டர்களை இந்தியா எற்றுமதி செய்யும்.
தற்போது 220 மெகாவாட் ரியாக்டர்களை நட்பு நாடுகளுக்கு ஏற்புமதி செய்யும் நிலையில் நம் இந்தியா இருக்கிறது. இதுதவிர, தோரியம் 232 மற்றும் யுரேனியம் 233 ஆகிய எரிபொருள் சுழற்சி அடிப்படையிலான ரியாக்டர்கள் 2032-ம் ஆண்டுக்கு பின்னர் அறிமுகமாகும். ஏற்கனவே, அணுசக்தி திட்டங்கள் மற்றும் அதன் விரிவாக்க திட்டங்களை வைத்துள்ள அனைத்து நாடுகளும் பாதுகாப்பு நம்பகத் தன்மை போன்ற கடுமையான சவால்களை எதிர் கொண்டுள்ளன.
பொதுவான நம்பகத்தன்மையுடன் இத்தகைய நாடுகள் நடந்து கொள்ள வேண்டும். போதுமான அளவுக்கு திறமையான விஞ்ஞானிகள், அணுசக்தி பாதுகாப்பு, எரிபொருள் மற்றும் கதிரியக்க கழிவு மேலாண்மை, அணு ஆயுத பரவல் தடையில் நம்பகத்தன்மை போன்ற வேறு பல சவால்களும் அணுசக்தி திட்டத்துக்கு பின்னால் உள்ளது.
அதிக அளவிலான தொழில் நுட்ப விஞ்ஞானிகள், அணு கழிவு மேலாண்மை மற்றும் மறு சுழற்சி போன்ற அதி நவீன அணுசக்தி தொழில் நுட்பங்கள், உறுதியான அணு உலை கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி, செலவு சிக்கனம் போன்ற அம்சங்கள் அணுசக்தி துறையில் ஆசியா கண்டத்தை வலிமையானதாக மாற்றும்.
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது சத்தான உணவு. இதன் பெயர், 'வெஜிடபிள் இடியாப்பம்'.
தேவையானவை: இடியாப்பம்-5, பெரிய வெங்காயம், கேரட், குடமிளகாய்-தலா ஒன்று, பீன்ஸ்-10, நெய்-2, டீஸ்பூன், கொத்தமல்லி (நறுக்கியது)-கைப்பிடி அளவு, உப்பு- தேவையான அளவு.
செய்முறை: பெரிய வெங்காயம், பீன்ஸ், கேரட், குடமிளகாய் நறுக்கி கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, நறுக்கிய காய்களை போட்டு, உப்பு சேர்த்து வதக்கவும். இடியாப்பத்தை கொஞ்சம் வெந்நீரில் சேர்த்து, வடிகட்டி அதனுடன் வதக்கிய காய்களை போட்டு கிளறவும். நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கி குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
குறிப்பு: இட்லி அரிசியை ஊற வைத்து அரைத்து மாவை மிதமான தீயில் வைத்து கெட்டியாக கிளறினால் இடியாப்ப மாவு ரெடி. இதை அச்சில் போட்டு பிழிந்து, ஆவியில் வேக வைத்தால் இடியாப்பம் தயார். இதனுடன் தேங்காய் பால், வெல்லம், சேர்த்து இனிப்பு இடியாப்பமாகவும் கொடுக்கலாம்.
ஆக்ஸ்போர்டு பரிசு!
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மேலாண்மை கல்வி நிறுவனம் 2006ம் ஆண்டு முதல் இந்த போட்டியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டின் போட்டி சமீபத்தில் நடந்தது. அதில் 16 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளம் தொழில் முனைவோர் இணைந்து நடத்தும் புதுமையான வர்த்தகங்கள் பரிசீலிக்கப்பட்டன.
அவற்றில் இறுதி போட்டிக்கு 4 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் காஷ்மீரின் லடாக் பகுதியில், ஆர்கானிக் ப்ரெஷ் ஆப்ரிகாட் பிராசசிங் என்ற பெயரில் ரசாயனம் கலக்காத பொருட்களின் விநியோகத்தில் ஈடுப்பட்டுள்ள குழுவுக்கு முதல் பரிசு கிடைத்தது.
என்றென்றும் அன்புடன்
உங்கள் அன்புராசு
***
