தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : பிப் 03, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 03, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!

உலகிலேயே மிகச் சிறிய மீன் தொட்டி!

உலகிலேயே மிகவும் சிறிய மீன் தொட்டியை உருவாக்கி, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 57 வயதுக்காரர் சாதனை படைத்துள்ளார். அவரது பெயர் அனதோலே கொனின்கோ. சைபீரியாவில் இருக்கும் ஓமாஸ் பகுதியை சேர்ந்தவர். இவர் ஏற்கனவே, மிகச்சிறிய புத்தகத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை புரிந்தவர்.

அரிசி , பப்பாளி, விதை, முடி போன்ற நுண்ணிய பொருட்களிலும் தனது திறமையால் எழுத்துக்களையும் பதிவு செய்தவர். தற்போது, இந்த சிறிய மீன் தொட்டியை உருவாக்கியுள்ளார். அந்த அதிசய மீன் தொட்டியின் நீளம் 30 மில்லி மீட்டர், உயரம் 24 மில்லி மீட்டர். அகலம் 14 மில்லி மீட்டர். இதை நமது உள்ளங்கைக்குள் வைத்துக் கொள்ளலாம். 2 கரண்டி (டீ ஸ்பூன்) அளவு தண்ணீரையே கொள்ளளவாக கொண்ட இந்த மீன் தொட்டியில் சைபீரியாவில் காணப்படும் சிறிய ரக மீன்களை விட்டிருக்கிறார். இவர் உருவாக்கிய சில அதிசய பொருட்கள் ரூ.32 லட்சத்துக்கு விலை போய் இருக்கிறது.

எல்லா மிருகங்களும் வாழும் சாலை!

உலகிலேயே மிகப்பெரிய மிருகக்காட்சி சாலை தென்னாப்பிரிக்காவில் உள்ளது. டிரான்ஸ்வா என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் பெயர் 'குரூகர் நேஷனல் பார்க்' இது 12 ஆயிரத்து 441 சதுரகிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் சுமார் 1000 யானைகளும், 250 ஒட்டகங்களும், 600 காட்டெருமைகளும் 500 சிங்கங்களும் இருக்கின்றன. மேலும், பலவகைப்பட்ட விலங்குகள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டு இருக்கின்றன. இந்த மிருகக்காட்சி சாலையை சுற்றிப் பார்ப்பதற்காக 448 கிலோ மீட்டர் நீளத்திற்கு, வாகனங்கள் போகக்கூடிய அளவுக்கு அகலமான சாலைகள் போடப்பட்டு இருக்கின்றன.

மிருகங்கள் எந்த இயற்கை சூழ்நிலையில் வசித்தனவோ அதே சூழ்நிலையில் வசிக்கும்படியான சூழ்நிலையை இந்த மிருக்காட்சி சாலையில் அமைந்திருக்கின்றனர். அநேக விலங்குகள் திறந்த வெளியில் உலவ விடப்பட்டு உள்ளன. இவை பார்வையாளர்களை எந்த விதத்திலும் தீங்கு செய்யாத வண்ணம் மிருகக்காட்சி சாலையை வடிவமைத்துள்ளனர்.

உலகின் பல்வேறு இடங்களில் வாழும் விலங்குகளை ஒரே இடத்தில் சேர்ந்து வைப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை. போலார் கரடி ஆண்டு முழுவதும் பனியிலேயே வசிக்கக் கூடியவை. சிலந்திக் குரங்குகள் வெப்பமான பாலைவனங்களில் வசிக்கக் கூடியவை. இவற்றை ஒரே இடத்தில் வைக்க வேண்டுமென்றால் மிருகக்காட்சி சாலையை பாதுகாக்கிறவர்கள் போலார் கரடியை பனியில் இருக்கும் படியாகவும், சிலந்திக் குரங்குகள் உஷ்ணமான பாலைவனப் பகுதியில் இருக்கும் படியாகவும் வடிவமைத்துள்ளனர். உணவு விஷயத்திலும் விலங்குகளை பராமரிப்பது கஷ்டமான காரியமாகும். யானைக்கு புல்லும் தழையும் அதிகமாக தேவைப்படும். ஆனால், புலி புல்லையும், தழைகளையும் தின்னாது. அதற்கு மாமிசம்தான் வேண்டும்; சில விலங்குகளுக்கு புத்தம் புதிய மீன்கள் வேண்டும். குரங்குகளுக்கு புதிய காய்கனிகள் வேண்டும்.

இந்த மிருகக்காட்சி சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வித்தியாசமான உணவு வகைகள் தேவைப்படுகின்றன.

நாள்தோறும், ஏராளமான மாடுகள், மீன்கள், ரொட்டிகள், புல், தானியம், திராட்சை, பால், ஆரஞ்சு, முட்டை போன்றவற்றை கொண்டு வந்து கொடுக்கின்றனர். இரையை சாப்பிட வைப்பதற்கும், விலங்குகளை தாஜா செய்ய வேண்டி உள்ளது. பெரிய பாம்புகள் மற்ற விலங்குகளை போல் சொன்னதும் கேட்பதில்லை. மலை, பாம்புக்கு இரைபோடும் போது, அதன் உணவை தொண்டைக்குள் வைத்து தள்ளி விட்டால்தான் தின்கிறது.

அதேபோல் மிருகங்களுக்கு வியாதிகள் வந்து விட்டாலும் பிரச்னைதான். பல்வலியால் அவதிப்படும் சிங்கத்தின் பல்லை பிடுங்குவதும், யானைக்கு தொந்தரவு தரும் கால்நகத்தை வெட்டுவதும், கொரில்லா குரங்கின் கபவாத காய்ச்சலை கட்டுப்படுத்துவதும், சாதாரண வேலையில்லை. அதெல்லாம் உண்மையான அக்கறை இருந்தால் மட்டுமே செய்ய முடியும். அந்த அக்கறை விலங்குகளை கவனித்து வருகின்றனர்.

அப்பாவிகளுக்கான அமைப்பு!

சர்வதேச அளவில் 'அமைதியை விரும்பும் நபர்'களுக்கு என்று ஒரு அமைப்பு உள்ளது. இதன் பெயர், 'அம்னெஸ்டி இண்டர்நேஷனல்' இது தனிமனித உரிமை, சுதந்திரம் மற்றும் உயிர் உடைமைகளின் நலனை பாதுகாப்பதற்காக கோரிக்கையை முன் வைக்கிறது. இந்த இயக்கம் குறிப்பிட்ட கட்சி அல்லது அரசுக்கு சொந்தமானது அல்ல. இந்த அமைப்பு பொது நல அமைதியில் விருப்பம் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து, லண்டனை மையமாக கொண்டு, 1961ல் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த அமைப்பின் மூலம் பல்வேறு வகையான கொடுமைகளில் இருந்து ஆயிரக்கணக்கான அப்பாவிகள் மற்றும் நிரபராதிகள் விடுதலை பெற்றுள்ளனர்.

இது 1977-ல் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றது. தகவல் தொடர்பின் வளர்ச்சியின் உச்ச கட்ட காலத்தில் வாழ்கிறோம்.

எல்லா துறையினருக்கும், எல்லா வயதினருக்கும், ஆண்-பெண் என இரு பாலருக்கும் உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் ஏதோ ஒரு அமைப்பு உதவ காத்திருக்கிறது. அதனை பற்றிய விழிப்புணர்வு வேண்டும். உதவும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற நினைப்பே நமக்கு ஆயிரம் உற்சாகம் தரும்.

தாய்ப்பாலில் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. தாய்க்கு முதல் இரண்டு, மூன்று நாட்களுக்கு சுரக்கக்கூடிய மஞ்சள் நிற பாலைத்தான், 'சீம்பால்' என்போம். இச்சீம்பாலை அவசியம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இதில் நோய் எதிர்ப்பு சக்தியினை அளிக்க கூடிய பொருள்கள் இருக்கிறது.

என்றென்றும் உங்கள் அன்பில்,
ஆட்டம் போடும், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us