தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பணம்!

பணம்!

பணம்!


PUBLISHED ON : பிப் 03, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 03, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓர் ஊரில் பெருஞ்செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவனோ பொறுப்பு மிகுந்தவனாக நல்லவனாக விளங்கினான். இளையவனோ, தீயவனாக யாருக்கும் அடங்காதவனாக இருந்தான்.

சாகும் நிலையில் இருந்தார் செல்வந்தர். தன் செல்வத்தை இரண்டு மகன்களுக்கும் ஏற்றத் தாழ்வின்றிப் பிரித்துத் தந்துவிட்டு இறந்தார்.

மூத்தவனோ செல்வம் வந்ததற்காகப் பெருமிதம் கொள்ளவில்லை. பொறுப்பு உள்ளவனாக நடந்து கொண்டான். அந்தச் செல்வத்தைப் பல மடங்கு பெருக்கினான். ஏழை எளியவர்க்கு நிறைய உதவி செய்தான்.

ஊர் மக்கள் எல்லாரும் அவனைப் புகழ்ந்து பேசத் தொடங்கினர். இளையவனோ செல்வம் தன் கைக்கு வந்தவுடன் தலைகால் புரியாமல், ஆடத் தொடங்கினான். மேலும், நிறைய கெட்ட பழக்கங்கள் அவனிடம் குடி கொண்டன. யாருடைய அறிவுரையும் அவன் செவியில் ஏறவில்லை. கெட்ட பழக்கங்கள் காரணமாக அவன் உடல்நிலை கெடத் தொடங்கியது.

மருத்துவர்களும், 'இனி அவன் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை!' என்றனர்.

சாகும் முன், அவன் தன் நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்தான்.

''நான் இவ்வளவு இளமையில் சாவதற்குக் காரணம் என் தந்தைதான்,'' என்று அழுதான்.

இதைக் கேட்டு எல்லாரும் திகைத்து நின்றனர்.

அவர்களைப் பார்த்து, ''என் தந்தை ஏராளமான செல்வத்தைத் தந்துவிட்டுப் போனார். அந்தச் செல்வம் இல்லையானால், நான் கெட்டு அலைந்திருக்க மாட்டேன். இவ்வளவு விரைவில் சாகவும் மாட்டேன். எனக்கு சின்ன வயதிலேயே நிறைய செல்லம் கொடுத்து, கண்டிப்பு இல்லாமல் வளர்த்தாலும் நான் கெட்டு குட்டிச் சுவராகி விட்டேன். பிள்ளைகளை இப்படி வளர்க்காதீர்கள்,'' என்றும் சொல்லி விட்டு தன் உயிரை விட்டான்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us