PUBLISHED ON : நவ 07, 2020

அ நிறம் | அளவு
தற்கால கார்கள், மிகவும் தரம் வாய்ந்தவை; கதவுகளை சாத்தி விட்டால், சொட்டு மழை நீர் கூட உள்ளே வராது. இம்மியளவு வெளிக்காற்று புக முடியாது.
'ஏசி' போட்டால் வெளிக்காற்று சிறிதளவு உள் இழுக்கப்படும்.
குளிர்காலத்திலோ, மழை நாட்களிலோ, 'ஏசி' போடாமல், கார் கதவுகளை அடைத்தபடி பயணிப்பதை பார்க்கலாம். இது, மிக தவறான செயல்.
குழந்தை துாங்கிவிட்டால், காரில் வைத்து, கதவுகளை பூட்டிவிடுகின்றனர். பூட்டிய காரில் குறைந்த அளவில் தான் ஆக்சிஜன் இருக்கும். குழந்தை சுவாசிக்கும் போது அது குறைந்து கொண்டே வரும். சில மணி நேரத்தில் மூச்சு திணறலால் இறக்கும் அபாயம் ஏற்படும்.
பெற்றோரே... எச்சரிக்கையாக இருங்கள்.
