தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சிக்கனமே சொர்க்கம்!

சிக்கனமே சொர்க்கம்!

சிக்கனமே சொர்க்கம்!


PUBLISHED ON : ஆக 16, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 16, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார் மாவட்டம், வெண்கரும்பூர் நடுநிலைப் பள்ளியில், 6ம் வகுப்பு படித்தேன். எங்கள் தமிழ் ஆசிரியர் ராமராஜா, சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்துவார்.

பெற்றோர் கொடுத்த காசுகளை, வீண் செலவு செய்யாமல், உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தை கற்றோம். இதைக் கண்டு, பெற்றோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒரு நாள், என் பாட்டியின் உடல் நிலை சரியில்லை. மருத்துவ செலவுக்கு பணப் பற்றாக்குறை ஏற்பட்டது. மிகவும் திணறிக் கொண்டிருந்தார் அப்பா.

என் உண்டியலை உடைத்து, எண்ணினேன்; அதில், 10 ஆயிரத்து, 350 ரூபாய் இருந்தது. அந்த பணத்தை அப்பாவிடம் கொடுத்தேன். ஆனந்த கண்ணீர் வடித்தார்.

சிக்கனமாக பணத்தை செலவு செய்து, சேமிக்கும் பழக்கத்தை இன்று வரை கடைப்பிடித்து வருகிறேன். அது, வாழ்வில் பல சிக்கல்களில் இருந்து விடுவிக்கிறது.

இந்த பழக்கத்தை கற்றுத் தந்த ஆசிரியரை வணங்குகிறேன்.

- த.நேரு, கடலுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us