
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
அவல் - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
முட்டை கோஸ், கேரட், பீன்ஸ், தேங்காய் துருவல் - தேவையான அளவு
கடுகு, உளுந்தம் பருப்பு, உப்பு, எண்ணெய், தண்ணீர் - சிறிதளவு.
செய்முறை:
வாணலியில், எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும். கொதித்ததும், நறுக்கிய முட்டைகோஸ், கேரட், பீன்ஸ் போடவும். நன்கு வெந்ததும் அவல் சேர்க்கவும். பின், தேங்காய் துருவல் போட்டு இறக்கவும்.
சுவை, ஆரோக்கியம் தரும், 'அவல் காய்கறி உப்புமா!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
- ரா.அமிர்தவர்ஷினி, புதுச்சேரி.