
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
மூங்கில் அரிசி - 1 கப்
பட்டாணி - 1 கப்
கேரட் - 1
பீன்ஸ் - 5
வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
கொத்தமல்லி தழை, வெண்ணெய், மிளகுத்துாள், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
மூங்கில் அரிசியை சுத்தம் செய்து, நீரில் ஊற வைத்து, சமைத்து சாதம் வடிக்கவும்.
வாணலியில், வெண்ணெய் காய்ந்ததும், பொடியாக நறுக்கிய பூண்டு, கேரட், பீன்ஸ், வெங்காயம், வேக வைத்த பட்டாணி சேர்த்து வதக்கவும்.
அதனுடன் உப்பு, மிளகுத்துாள், சாதம் வடித்த கஞ்சி, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக வெந்த பின், மூங்கில் சாதம் சேர்த்து, கொதிக்க விடவும். வெண்ணெய், நறுக்கிய கொத்தமல்லி தழை துாவி இறக்கவும். சுவைமிக்க, 'மூங்கில் அரிசி சூப்!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி பருகுவர்.
- மு.சுகாரா, ராமநாதபுரம்.
தொடர்புக்கு: 88259 50689