PUBLISHED ON : பிப் 12, 2022

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
கனிந்த விளாம்பழம் - 2
வெல்லம் - 50 கிராம்
உளுந்தம் பருப்பு, மிளகு துாள், கடுகு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
விளாம்பழங்களை உடைத்து ஓட்டிலிருந்து விழுதை பிரித்து எடுத்து நன்கு பிசையவும். இதனுடன், துாளாக்கிய வெல்லம், மிளகுத் துாள், உப்பு சேர்த்து பிசையவும். கடுகு, உளுந்தம் பருப்பை எண்ணெயில் தாளித்து அதில் கொட்டவும்.
சுவைமிக்க, 'விளாம்பழ பச்சடி!' தயார். உடல் நலனுக்கு ஏற்றது.
- வசந்தா வேணுகோபால், சென்னை.
தொடர்புக்கு: 98409 97058
