தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/காப்பது கடமை!

காப்பது கடமை!

காப்பது கடமை!


PUBLISHED ON : பிப் 12, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 12, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகில் காலநிலை மாற்றத்தால் உயிரினங்கள் பல அழிந்தன. தற்போது, காடு அழிப்பு, வனத்தில் வேட்டை போன்ற மனித செயல்பாடுகளால் பல உயிரினங்கள் அழியும் நிலையில் உள்ளன. அவற்றை பாதுகாக்கும் முயற்சியில் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் ஈடுபட்டுள்ளது. அழிவின் விளிம்புக்கு சென்ற பல உரியினங்களை, இந்த நிறுவனம் மீட்டு காத்து நிலைபெற வைத்துள்ளது. அவற்றில் சில உரியினங்களைப் பற்றி பார்ப்போம்.

நீலப்பல்லி!

தென்அமெரிக்க கண்டப் பகுதியில் கரீபியன் கடலில் அமைந்துள்ளது, கேமன் தீவுகள். ஐரோப்பிய நாடான இங்கிலாந்தின் ஆட்சிக்கு உட்பட்டது. இங்கு, நீல வண்ணத்தில் ஒருவகை பல்லி இனம் ஏராளமாக காணப்பட்டது. இதன் எண்ணிக்கை, 1990ல் ஒரு டஜனுக்கும் குறைவாக அருகிவிட்டது.

இந்த அபூர்வ விலங்கை பாதுகாக்க, கேமன் தீவு தேசிய டிரஸ்ட் மற்றும் உலக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகள் களத்தில் குதித்தன. அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் கடும் நடவடிக்கைகைளை எடுத்தன.

இதையடுத்து, அழிவின் விளிம்பில் இருந்த இந்த உயிரினம், 30 என்ற எண்ணிக்கையாக, 2001ல் உயர்ந்தது. தற்போது வெகுவாக அதிகரித்துள்ளது. அழியும் நிலையிலிருந்த இந்த உயிரினத்தை, பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்ட இனம் என்ற பட்டியலுக்கு மாற்றி, கண்காணித்து வருகிறது, பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்.

லெமூர்!

கிழக்கு ஆப்ரிக்க நாடான மடகாஸ்கர் கிழக்கு மலைக்காடுகளில் லெமூர் என்ற விலங்கு அதிகம் காணப்பட்டது; நாய் முகத்தோற்றத்துடன் கூடிய குரங்கு இது. ஒரு கட்டத்தில் அழிந்துவிட்டதாக கருதப்பட்டது. இச்சூழலில், 1986ல் சிறு எண்ணிக்கை காட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மூங்கில் காடுகளை அழித்ததே இந்த விலங்கு அருக காரணம் என கண்டறியப்பட்டது. ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் உள்ள அறக்கட்டளை ஒன்று மக்களுடன் இணைந்து லெமூர் விலங்கை பாதுகாக்கும் முயற்சியில், 2005ல் இறங்கியது. அதற்கு பலன் கிடைத்துள்ளது. கடந்த, 2007ல், 60 மட்டுமே இருந்த லெமூர், 2018ல், 150 என உயர்ந்துள்ளது.

நரைமயிர் கரடி!

வட அமெரிக்கா கண்டப் பகுதியில் உள்ளது நரை மயிர் கரடி இனம். கி.பி., 1800ல் இதன் எண்ணிக்கை, 50 ஆயிரமாக இருந்தது. இது, 1960ல் வெறும், 800 எனக் குறைந்து விட்டது. காட்டில் சாலை அமைத்தல், வேட்டையாடுதல், காட்டுப்பகுதியில் மனித குடியிருப்பு பெருக்கம் போன்ற காரணங்களால் இந்த இனம் அழிந்து வந்தது.

இதை பாதுகாக்க முயற்சி எடுக்கப்பட்டதால், 2018ல், 1,500 என எண்ணிக்கையில் பெருகியது. உலகின் மிகப்பெரிய தேசிய பூங்கா எல்லோ ஸ்டோன். அமெரிக்காவில் உள்ளது. அங்கு, இந்த விலங்கை பராமரிக்க, 22 ஆயிரத்து 500 சதுர கி.மீ., பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.

- செல்வ கணபதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us