PUBLISHED ON : டிச 13, 2013

கொள்ளை நண்டு அல்லது தென்னை மர நண்டு என்று அழைக்கப்படும் ஒரு வகை நண்டு முதுகெலும்பு பெற்ற பிராணி.வளர்ச்சி அடைந்த இந்த வகை நண்டின் கால்கள் 75 சென்டி மீட்டர் நீளம் கொண்டவை. இந்த வகை நண்டுகளின் எடை நான்கு கிலோ வரை இருக்கும். இந்த வகை நண்டுகள் தென்மேற்கு பசிபிக் கடலிலும், இந்தியப் பெருங்கடலிலும் காணப்படு கின்றன. இந்த நண்டுகள் மரங்களில் வேகமாக ஏறக்கூடிய திறனைப் பெற்றுள்ளன. கொள்ளை நண்டு என்ற பெயர் அதனுடைய இரண்டு பழக்க வழக்கங்களிலிருந்து வந்தது. எல்லாவற்றையும் திருடும் தன்மையும், தேங்காயின் சதைப்பற்றை உண்ணக் கூடிய தன்மையும் பெற்றுள்ளது.
இந்த வகை நண்டினால் தேங்காயை உரிக்க முடியாது. ஆனால், உரித்து வைத்துள்ள தேங்காயை உண்ணும். பெண் நண்டுகள் கடலில் முட்டையிடுகின்றன. குஞ்சுகள் கடலில்தான் பிறக்கின்றன. நண்டுகள் நிலத்திற்கு வரும் போது கொஞ்சம் பெரியதாக வளர்ந்து விடுகின்றன.
இவை நிலத்தில் வாழ்ந்தாலும், தண்ணீரில் மூழ்கி சில நிமிடங்கள் வரை உள்ளேயே இருக்கும் திறனைப் பெற்றுள்ளன.
இதன் மூலம் தனது உடலை ஈரமாக வைத்திருக்கும். தனது கால்கள் தண்ணீரில் மூழ்கும் அளவிற்கு நின்று கொண்டு வாயின் மூலமாக தண்ணீரை உட்கொள்கிறது.
