PUBLISHED ON : டிச 13, 2013

அ நிறம் | அளவு
கடற்சிங்கங்களில் இது அபூர்வமானது. இதன் பெயர் மாங்க் சீல் (அதாவது துறவி கடற்சிங்கம்) மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள கபோபிளாங்கோ தீபகற்ப பகுதியில் இவை காணப்படுகின்றன. மேற்கு சகாரா மொரிடானியா கடல் எல்லைப் பகுதிகளிலும் இவைகளைப் பார்க்க முடியும்.
8 அடி நீளம் வரை வளரும் இந்த துறவி கடற்சிங்கங்கள் 250 முதல் 300 கிலோ வரை எடை கொண்ட தாக இருக்கும். இவற்றின் இனம் இன்று 500க்கும் சற்று கூடுதலான அளவிலேதான் இருக்கிறது. கடல் நீரில் மனிதர்கள் இருந்தால் உடனடியாக இந்த கடற்சிங்கங் கள் அதை உணர்ந்து கொள்கின்றன. இவை பெரும் பாலும் மற்ற பிராணிகளுக்கு தொந்தரவு தராமல் வாழ்வதால்தான் இவற்றுக்கு, 'துறவி கடற்சிங்கங்கள்' என்று பெயர் சூட்டியுள்ளனர்.
