
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் ஞாயிறு மிக புனித நாளாக கடைபிடிக்கப் படுகிறது. அன்று, துணி துவைத்து வாசலில் உலர்த்த கூடாது. பக்கத்து வீட்டுக்காரருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சத்தம் ஏற்படுத்த கூடாது.
ஐரோப்பாவில், 100 வயதை கடந்தவர்கள் இங்கு அதிகம். காரணம், நல்ல காற்று, சிறந்த மருத்துவ வசதிகள் உள்ளன.
இங்குள்ளவர்கள் தான் அதிகமாக நோபல் பரிசு பெறுகின்றனர். கணிதம் மற்றும் அறிவியலில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள்.
இங்கு வசிக்கும், 8.25 சதவீதம் பேர் வெளிநாட்டினர். தரமான வாழ்வுக்கு உத்தரவாதம் தரும் நாடுகளில் இதுவும் ஒன்று. இங்கு பருமனாக இருப்போரை பார்ப்பது அபூர்வம்.
இந்த நாட்டில், 7 ஆயிரம் ஏரிகள் உள்ளன. இயற்கை எழிலுக்கு இந்த ஏரிகளும், மலைகளும், பனிப்பாறைகளும் தான் காரணம்.
குற்றச் செயல்கள் குறைவு; உலக செஞ்சிலுவை சங்கம், 1863ல் இங்கு தான் உதயமானது. இங்குள்ள, 'கோட் கார்ட்' என்ற கணவாய் பாதை, 57 கி.மீ., நீளம் உடையது. உலகின் மிக நீளமான படிகட்டு இங்கு தான் உள்ளது. இது, 1,669 மீட்டர் உயரம் உடையது. இதில், ஆண்டிற்கு ஒரு நாள் மட்டுமே பயணிக்க அனுமதி உண்டு.
சுவிட்சர்லாந்தில், 208 மலைகள் உள்ளன. ஐரோப்பாவில், மிக உயர்ந்த சிகரங்களை உடையது. ஜங்ப்ராவ் ஜோச் என்ற சிகரத்தில் ஒரு ரயில் நிலையம் உள்ளது. ஐரோப்பாவின் மிக உயரமான பகுதியில் அமைந்துள்ளது. ஒரு அருங்காட்சியகம் மற்றும் பனிக்கட்டியால் ஆன அரண்மனையும் உள்ளன. தங்க கழுத்து உடைய கழுகுகள் இங்கு பிரபலம்.
- செல்வ கணபதி