PUBLISHED ON : ஜூன் 21, 2013

அ நிறம் | அளவு
* கடலைமாவும், கோதுமை மாவும் சரிசமமாக எடுத்து நன்கு சலித்து காய்ச்சிய பாலை கொண்டு விழுது தயாரித்து முகம், கை, கால்களில் தடவி குளித்தால், அழகுக்கு அழகு சேர்க்கும். அழுக்கும் வெளியேறும்.
* பாதாம் பருப்பை காய வைத்து பொடித்து ஆலிவ் ஆயில் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்து கழுவி விட முகம் பொன் போல் மின்னும்.
* தயிருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் எடுத்து விட முகம் பளிச் என இருக்கும். பவுன்டேஷன் இல்லாமலேயே மேக்கப் போடலாம்.
* கஸ்தூரி மஞ்சளுடன், பயத்தம் மாவும் கலந்து உடல் முழுவதும் தேய்த்து குளித்தால், நல்ல வாசமும் மென்மையும் ஏற்படும். முகத்தில் சுத்தமான கஸ்தூரி மஞ்சளையே உபயோகப்படுத்தவும்.
