PUBLISHED ON : ஜூலை 22, 2011

விமானம், ஹெலிக்காப்டர், ராக்கெட் ஆகியவை பறந்து செல்லும் போது ஏற்படுகின்ற விபத்து பற்றி அறிந்து கொள்ள ஒரு 'கருப்புத் தகவல்' உள்ளதே அதைப் பற்றித் தெரியுமா?
விமானத்தின் விமானி அறைக்குள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டி இது! ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும். விமானிகளின் சம்பாஷனை விபத்துக்கான முன் நடவடிக்கை ஒலிகள் மற்றும் விமானத்தின் உயரம், வேகம், சாய்வு சரிவுகள் போன்ற இயக்கக் குளறுபடிகள், அவற்றை நெறிப்படுத்த விமான ஓட்டி கையாண்ட நிவாரண நெறிப்படுத்தும் முயற்சிகள் ஆகிய பல தகவல்களும் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கொரு முறையும் ஒரு காந்த நாடா அல்லது தட்டில் மென் மேலும் அழித்தழித்து பதிவு செய்யப்பட்ட வண்ணமிருக்கும். இதன் மேலுறையானது நெருப்பு, வெப்பம், அழுத்தம், அதிர்ச்சி போன்ற அதீத பாதிப்புகளாலும் சிதைவுறாதபடி விசேஷத் தன்மை கொண்டது. ஒளியை வெளியே விடாத, ஏற்றிய தகவல்களை வெளியே கசியவிடாத இதனை கருப்புப் பெட்டி என்றழைப்பர்.
