தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கரிசலாங்கண்ணி கீரை!

கரிசலாங்கண்ணி கீரை!

கரிசலாங்கண்ணி கீரை!


PUBLISHED ON : அக் 23, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 23, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மருத்துவ பயன் மிக்கது கரிசலாங்கண்ணி கீரை; சத்துக்கள் நிறைந்தது.

இதில், வெள்ளை மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணி வகை உண்டு. இரண்டிலுமே மருத்துவ குணம் இருந்தாலும், மஞ்சள் கரிசலாங்கண்ணி முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு, பொற்றலை கரிசாலை என்ற பெயரும் உண்டு.

வெள்ளைக் கரிசலாங்கண்ணியை, கரிசாலை கையன்னாதி, கைதோணி என்ற பெயரிட்டு அழைப்பர்.

கசப்பு சுவை உடையது; அதனால், வழக்கமான உணவு போல் சமைத்துச் சாப்பிட யாரும் விரும்புவதில்லை.

இதன் இலையை நசுக்கி தேய்த்தால், அந்த இடம் கருப்பாக மாறி விடும். இந்த கீரையில், தைலம் தயாரித்து, தலையில் தேய்த்து குளித்தால், கண் பார்வை தெளிவு பெறும்; தலைமுடி கருமையாகவும் பளபளப்புடனும் வளரும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணியை சமைத்துச் சாப்பிடலாம்; இது, மஞ்சள் காமாலை நோயிலிருந்து காக்கும். உடல் கிறுகிறுப்பு, கண்கள் இருண்டு போதல் போன்ற பாதிப்புகளையும் போக்கும்; சிந்தனையில் தெளிவை தரும்.

உடலில் நோய்க்கிருமிகளை கொல்லும் சக்தி இதற்கு உண்டு; பித்த சம்பந்தமான நோய்களுக்கு கைகண்ட மருந்து; உடலில் பெருகும் பித்த நீரை வெளியேற்ற உதவும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த நோய்களை குணமாக்க வல்லது; இதன் சாறை கொடுத்தால், சளியால் ஏற்படும் மூக்கடைப்பு நீங்கும்; இதன் சாறுடன், தேன் கலந்து அடிக்கடி கொடுத்தால் சளித்தொல்லை நீங்கும்.

பற்களுக்கு வலுவையும், பளபளப்பையும் அளிக்க வல்லது; வழுக்கையையும், நரையையும் போக்க வல்லது.

இக்கீரையை...

பச்சையாக வாயிலிட்டு மென்று விழுங்கலாம்

பருப்புடன் சேர்த்து, சாம்பார், கூட்டு அல்லது பொரியல் செய்து சாப்பிடலாம்

துவையலாக அரைத்தும் சாப்பிடலாம்

பச்சையாக மென்று சாப்பிடுவதில் சத்து அதிகம்.

கீரையை உலர்த்தி சூரணம் செய்து பயன்படுத்தினால், உடல் இளமை மிடுக்குடன் இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us